இணையத்தளத்தினூடாக ஐ.எஸ்ஸினால் பரிமாற்றம் !!

Read Time:2 Minute, 15 Second

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவை​யான நிதி, இணையத்தளங்கள் ஊடாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சர்வதேசப் பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

விசேடமாக, பிட் கொய்ன் (Bit Coin) போன்ற சர்வதேச நிதிப் பிரிவுகளைப் பயன்படுத்தியே, இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இணையத்தளப் புலனாய்வு நிறுவனமொன்றினால் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தகவலளித்துள்ள Whitestream புலனாய்வு நிறுவனம், Coin Payment நிறுவனங்களோடு இணைந்த Bit Coin விலாசங்கள் பல, இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் அமைப்புக்குச் சொந்தமாக இருக்கின்றதெனக் கூறியுள்ளது.

இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முதல் நாள், இந்த Bit Coin address ஊடாக, 9,800 அமெரிக்க டொலர்களிலான Bit Coin கொடுக்கல் வாங்கல்கள் இரண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனவென, மேற்படி புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்கு முதல் நாளன்று, பாரிய Bit Coin தொகையொன்று, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினால் நிதி சேகரிக்கப் பயன்படுத்தப்படும் bit Coin wallet ஊடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இஸ்ரேலைத் த​ளமாகக் கொண்ட Whitestream புலனாய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளதாக, சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post திரும்பிப் பார்ப்போம்; திருந்தி விடுவோம் !! (கட்டுரை)