சுற்றுலா போகலாமா? (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 24 Second

கோடை விடுமுறை ஆரம்பிச்சாச்சு….. இந்த விடுமுறையில் எங்கு sசுற்றுலா போகலாம்ன்னு முன்பே பிளான் எல்லாம் போட்டு வைத்திருப்போம். ஒரு சிலர் அலுவலக வேலையை பொறுத்து தங்களின் விடுமுறை என்று திட்டமிடுவார்கள். விடுமுறைக்கு போகலாம்ன்னு முடிவு செய்தாயிற்று… ஆனால் எங்கு போவது, எப்படி போவது, தங்க இடம் வசதியாக இருக்குமா? போகும் இடத்தில் என்னெல்லாம் சுற்றி பார்க்கலாம்… இப்படி நிறைய கேள்விகள் நமக்குள் எழும். அந்த கேள்விகளுக்கான விடைகள் எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது. செல்போனை எடுங்க… சுற்றுலா சம்பந்தமான ஆப்பை டவுண்லோட் செய்யுங்க…. விடுமுறைய கொண்டாடுங்க…

ஹாலிடிஃபை (Holidify)

இந்தியாவை சுற்றிப் பார்க்க சிறந்த சுற்றுலா ஆப் ஹாலிடிஃபை. இந்த ஆப்பினை இந்தியாவைச் ேசர்ந்த சிறந்த பயண வல்லுநர்கள் வடிவமைத்துள்ளனர். ஹாலிடிஃபை ஆப் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் குறித்து விவரங்கள் அளிப்பது மட்டும் இல்லாமல் நம்முடைய பயணத்தை எப்படி திட்டமிடலாம் என்று ஆலோசனையும் வழங்குகிறது.

நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும். ஆனால் எங்கு செல்வது என்று குழப்பமாக உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். முதலில் உங்களின் பயண நாட்கள், சுற்றுலா செல்ல இருக்கும் இடம், அங்கு தங்குவதற்கான ஓட்டல்… இது போன்ற தனிப்பட்ட விருப்பங்கள் குறித்த ஆலோசனையை இந்த ஆப் மூலம் பெறமுடியும்.

சிலர் புதுமையான இடத்துக்கு செல்ல விரும்புவார்கள். அதாவது மலையேற்றம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், சாலை பயணங்கள் மற்றும் பல வித்தியாசமான பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான ஏற்ற இடத்தையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, லெஹ் லடாக், அமிர்தசரசில் உள்ள தங்க கோயில், மேகாலயாவில் உள்ள நீர்வீழ்ச்சி, அந்தமான் மற்றும் லட்ச தீவில் உள்ள எக்சாடிக் தீவுகள் மற்றும் கேரளாவின் மலைகள்….

சுற்றுலாக்கு செல்லும் போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அங்குள்ள முக்கியமான இடங்கள் என்ன என்று தெரிந்து கொள்ளவும், தங்கும் இடம், சிறந்த உணவகங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் ஹாலிடிஃபை உதவுகிறது. இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்றும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். தினமும் ஒவ்வொரு ஊரை பற்றிய விவரங்கள் இதில் பதிவு செய்யப்படுவதால், உங்களின் சுற்றுலாவை சுலபமாக திட்டமிடலாம்.

டிராவல் டிரையாங்கில்(Travel Triangle)

டிராவல் டிரையாங்கில், பயணிகளுக்கான சிறந்த ஆன்லைன் சுற்றுலா ஆப். இதன் மூலம் சிறந்த விடுமுறைக்கான தனிப்பட்ட இடங்கள் என 65க்கும் மேற்பட்ட இடங்களை இந்தியா மற்றும் வெளிநாட்டில் அமைத்துத் தருகிறார்கள். ஹனிமூன், குடும்ப சுற்றுலா அல்லது தனிப்பட்ட பயணம் இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் உங்களின் வசதிக்கு ஏற்ப டிராவல் டிரையாங்கில் அளித்து வருகிறது.

டிராவல் டிரையாங்கிலில் பலதரப்பட்ட சுற்றுலா பேக்கேஜ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்யலாம். அது மட்டும் இல்லாமல் விமான டிக்கெட், ஓட்டல் புக்கிங், சுற்றிப்பார்க்கும் இடங்கள் மற்றும் தங்கும் நாட்கள் என அனைத்தையும் உங்களின்பட்ஜெட்டுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளமுடியும்.

சுற்றுலாக்கான கட்டணத்தை மொத்தமாகவோ, தவணை முறையிலும் கட்டலாம். அதாவது முதலில் உங்களின் விமான டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தலாம். அதன் பிறகு சுற்றுலா பயணம் திட்டமிட்ட பிறகு மீதமுள்ள பணத்தை செலுத்தலாம். டிராவல் டிரையாங்கில் மூலம் பயண முகவர்களையும் அமைத்துக் கொள்ளலாம்.

ஈஸ்மைடிரிப் (EaseMyTrip)

சுற்றுலா செல்ல மற்றுமொறு ஆப்தான் ஈஸ்மைடிரிப் ஆப். ஆண்ட்ராய்ட் மொபைல் ஃேபான் உள்ளவர்கள் பிளேஸ்டோர் மூலம் இதனை டவுண்லோட் செய்து உங்களின் சுற்றுலாவை மகிழலாம். விமானத்தில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப விமான கட்டணங்களை ஒப்பிட்டு பார்த்து முன்பதிவு செய்யலாம். இதற்கான சிறப்பு கட்டணம் ஏதும் செலுத்த அவசியமில்லை. பட்ஜெட்டுக்கு ஏற்ப ஓட்டல் அறையை முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் தள்ளுபடி வசதியும் உள்ளது.

சிலர் பேருந்தில் செல்ல விரும்புவார்கள். அவர்களின் வசதிக்கு ஏற்ப ஏ.சி, டீலக்ஸ் மற்றும் வேல்வோ பஸ்கள் உள்ளன. சிலருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் எங்கு செல்வதுன்னு குழப்பமாக இருக்கும். அவர்கள் இதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்தால் போதும், ஆலோசகர்கள் உங்களின் தேவையை அறிந்து ஆலோசனை அளிப்பார்கள். அதன்படி உங்களின் சுற்றுலா பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்.

ஹாப்பி ஈசிகோ (HappyEasyGo)

குறைந்த விலையில் விமான டிக்கெட் மற்றும் தங்குமிடத்திற்கான சிறந்த ஆப் ஹாப்பி ஈசிகோ. இதனை உங்க ஃபோனில் டவுண்லோட் செய்து விமானங்களின் கட்டணங்களை ஒப்பிட்டு அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப புக் செய்யலாம். வெளிநாடு மட்டும் இல்லாமல் இந்தியாவிற்குள் எங்கு செல்வதாக இருந்தாலும் அதற்கான பல விமானங்கள் பற்றிய விவரங்கள் இந்த ஆப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 5 ஸ்டார் முதல் 1 ஸ்டார் ஓட்டல்கள் என 1000த்துக்கும் மேற்பட்ட ஓட்டல்களின் பட்டியல்கள் இருப்பதால், உங்களின் தேவைக்கு ஏற்ப பதிவு செய்ய உதவியாக இருக்கும். மேலும் ஆப் மூலம் ஓட்டல் அறை மற்றும் விமான டிக்கெட்டை பதிவு செய்தால் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வசதியும் உண்டு.

ஆப்பின் ஷாப்பி சில்வர் மற்றும் கோல்ட் அட்டையின் மூலம் பதிவு செய்யும் போது உங்களுக்கு ஒரு போனஸ் தொகையும் சேர்வதால், அடுத்த முறை நீங்கள் பயணம் செய்யும் போது, அந்த தொகையை உங்களின் அடுத்த பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் நண்பர்களை பற்றி குறிப்பு கொடுப்பதாலும், அவர்கள் ஆப்பினை தங்களின் மொபைலில் பதிவு செய்தால், உங்களுக்கு ஒரு தொகை போனசாக வழங்கப்படும்.

டிரிப்லெட் (Triplt)

ஒரே ஆப் உங்களின் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது என்றால் அது டிரிப்லெட் ஆப்பாகத்தான் இருக்க முடியும். நீங்கள் டிரிப்லெட் மூலம் தான் உங்களின் சுற்றுலா பயணங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பதிவு செய்த பிறகு விமான முன்பதிவு, ஓட்டல் பற்றிய விவரங்கள் பற்றி டிரிப்லெட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.

அவர்கள் உங்களின் சுற்றுலாவை எப்படி கழிக்கலாம் என்று திட்டமிட்டு தருவார்கள். டிரிப்லெட் உங்களின் பயண கேலண்டர் என்றே குறிப்பிடலாம். விமானத்தில் உங்களுக்கு ஏற்ப இடத்தை தேர்வு செய்யவும், எப்போது விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும், விமான நேரம், விமானத்தில் உள்ள ஓய்விடங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களின் பயணம் பற்றி பதிவு செய்துவிட்டால் போதும், எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவ்வப்போது உங்களுக்கு தெரியப்படுத்தும். சரியான நேரத்தில் உங்களின் பயணம் தொடர சிறப்பு ஆப் டிரிப்லெட்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!! (உலக செய்தி)
Next post வெளிநாட்டு மீள்கடனில் சிக்கித்தவிக்கும் பொருளாதாரம் !! (கட்டுரை)