இஸ்ரேல் வீசிய குண்டு மழை: லெபனானில் 10 லட்சம் வெடிக்காத குண்டுகள்
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை லெபனான் தீவரவாதிகள் சிறைபடுத்தியதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தியது. 34 நாட்கள் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்தது. இதனால் லெபனான் நாட்டிலிருந்து பொது மக்கள் ஏராளமானவர்கள் வெளியேறினார்கள். ஏராளமான வெடிகுண்டுகளை ஒன்று சேர்த்து கொத்து கொத்தாக லெபனான் மீது குண்டு மழை பொழிந்தது இஸ்ரேல்.
இருநாட்டிற்கும் இடையேயான சண்டை ஓய்ந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து லெபனான் மக்கள் மீண்டும் இங்கு செல்லத்தயாராகி வருகின்றனர். இந்நிலையில் லெபானின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளில் 40 சதவீதம் வரை வெடிக்காமல் மரங்கள், புதர்கள், வயர்கள் போன்றவற்றில் சிக்கியிருப்பதாக லெபனானில் சோதனை செய்து வரும் ஐ.நா. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிளஸ்டர் குண்டுகளில் இணைக்கப்பட்டுள்ள மொத்த வெடிகுண்டுகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே இவற்றையெல்லாம் கண்டுபிடித்து செயல் இழக்கும் பணி லெபனானில் நடைபெற்று வருகிறது. இந்த பணி லெபானன் மக்கள் மீண்டும் தங்கள் நாடு திரும்புவரை 2 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் கிளஸ்டர் குண்டுகள் பற்றிய விபரங்களை சரியாகத் தராததால் குண்டுகளை செயல் இழக்க செய்யும் பணி தாமதமடைவதாக ஐ,நா, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.