மார்பக கட்டிகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 46 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு தொட்டா சிணுங்கி, கழற்சிக்காய், மஞ்சள், பூண்டு ஆகியவை மருந்தாகிறது. தொட்டா சிணுங்கியை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தொட்டா சிணுங்கியின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம். தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டி கரையும்.

தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும். தொட்டா சிணுங்கியின் தண்டு பகுதியில் முட்கள் இருக்கும். இளம் சிவப்பு பூக்களை கொண்ட இதை தொட்டவுடன் இலைகள் சுருங்கி கொள்ளும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை. இதன் காய்கள், இலைகள், பூக்கள் பயனுள்ளதாக விளங்குகிறது. வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது. உள் அழற்சியை போக்கும். கருப்பையில் ஏற்படும் வீக்கம், வலியை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக்கசிவுக்கு மருந்தாகிறது.
கழற்சிக்காயை பயன்படுத்தி மார்பக கட்டிக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.

கழற்சிக்காயை காய வைத்து அதன் ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்யவும். 4 பங்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகு பொடி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பு இதை அரை ஸ்பூன் சாப்பிட்டுவர மார்பக கட்டி கரையும். மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.கழற்சிக்காய் கசப்பு சுவையுடையது. காய்ச்சலை குணப்படுத்தவல்லது. வீக்கத்தை கரைக்கும் தன்மை கழற்சிக்காய்க்கு உண்டு. கழற்சிக்காயை உடைத்து பொடித்து நீரில் குழைத்து மேல்பற்றாக போட்டுவர மார்பக கட்டிகள் வெகுவிரைவில் கரையும். மார்பக கட்டி நாளடைவில் புற்றுநோயாக மாறும். எனவே, இதை ஆரம்பத்திலேயே சரிசெய்து கொள்வது நல்லது.

பூண்டு, மஞ்சளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் 5 பூண்டு பற்கள் தட்டிபோடவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டிகள் கரையும். வலி, வீக்கத்தை குறைக்கும். நார்க்கட்டிகளை கரைத்து கட்டி வந்த இடம் தெரியாமல் செய்கிறது.பனிக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது. சோற்றுக்கற்றாழை சாறை சருமத்தில் பூசி சிறிது நேரத்துக்கு பின்னர் கழுவுவதால் வறண்ட சருமம் மென்மையாகும். சருமம் பளபளப்பாகும். உடல் பொலிவு பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஞ்ஞானிகளை மிரள வைத்த கைலாய மலை.!! (வீடியோ)
Next post பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் !! (சினிமா செய்தி)