மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் ஆடாதோடை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 50 Second

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைகளில் வாங்கப்படும் கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்த கூடியதும், சளி, இருமல் பிரச்னைக்கு மருந்தாக அமைவதும், வயிற்று கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதும், காய்ச்சலை தணிக்க கூடியதும், மூச்சிரைப்பு, மூச்சு முட்டுதலை சரிசெய்யவல்லதும், தொண்டை கட்டை போக்க கூடியதுமான ஆடாதோடையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.

சாலையோரங்கள், தோட்டங்களில் காணக்கூடிய ஆடாதோடை. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இது நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். விக்கலை போக்கும். வயிற்றில் சேரும் வாயுவை அகற்றும். காய்ச்சலை குணப்படுத்துகிறது.ஆடாதோடை இலையை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும்மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, மஞ்சள், தேன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், கால் ஸ்பூன் மஞ்சள், 2 ஸ்பூன் ஆடாதோடை இலை சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர காய்ச்சல் குணமாகும். பல்வேறு உள்நோய்கள் குணமாகும்.

வெண்ணிற பூக்களை கொண்ட ஆடோதோடை சளியை கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது. தொண்டைக் கட்டை நீக்குவதில் இது முதன்மையாக விளங்குகிறது. ஆடாதோடையை தேனீராக்கி பருகுவதன் மூலம் தொண்டை கட்டு விலகி போகும். மூச்சிரைப்பு, மூச்சு முட்டுதலுக்கு மருந்தாகிறது. ஈரலுக்கு பலம் தருகிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகி பயன் தருகிறது. ஆடாதோடை இலையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, மிளகுப் பொடி, இஞ்சி, தேன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆடாதோடை இலை சாறு, சிறிது மிளகுப் பொடி, இஞ்சி துண்டுகள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தேன் சேர்த்து குடித்துவர சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னைகள் குணமாகும். மூச்சு முட்டுதல், மூச்சு திணறுதல் ஆகியவற்றை சரிசெய்கிறது.

அற்புதமான மருத்துவ குணங்களை உடைய ஆடாதோடை சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. நுரையீரல் பாதையில் ஏற்படும் தடையை உடைத்து நல்ல சுவாசத்தை தருகிறது. ஆடாதோடை இலையை பயன்படுத்தி மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, மஞ்சள் பொடி, தேன்.செய்முறை: 2 ஸ்பூன் ஆடாதோடை இலை சாறு எடுக்கவும். இதனுடன் 2 சிட்டிகை மஞ்சள் பொடி, தேன் சேர்த்து கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும். ஆடாதோடை இலையை பயன்படுத்தி வயிறு உப்புசம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, பனங்கற்கண்டு, ஏலக்காய்.செய்முறை: 2 ஆடாதோடை இலையை பொடியாக நறுக்கி எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடி சேர்த்து நீர்விட்டு கலக்கவும். இதை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரை குடித்துவர வயிறு உப்புசம், வயிற்று வலி பிரச்னைகள் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீக்கத்தை கரைக்கும் மஞ்சள்!! (மருத்துவம்)
Next post பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட மிரளவைக்கும் 6 மர்ம நகரங்கள்! (வீடியோ)