வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! (உலக செய்தி)

Read Time:1 Minute, 51 Second

அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையை கண்காணித்து வருவதாகவும், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா நேற்று மேற்கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சி குறித்த தனது கோபத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது வட கொரியா.

இந்த வருடாந்திர கூட்டு இராணுவ பயிற்சிகள் ஆடம்பரமாக நடைபெறவில்லை. எனினும், இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் ஆகியோருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஏவுகணை சோதனைகள் செய்வதாகவும் கூறி அமெரிக்காவும் மற்றும் உலக நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஏன் இவ்வளவு தாமதம்?
Next post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!!(அவ்வப்போது கிளாமர்)