பாடசாலை கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 14 Second

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனூரை சேர்ந்தவர் ரெட்டியப்பா இவரது மனைவி நந்தினி. இவர்களின் மகன் ஹர்‌ஷவர்தன் (வயது 6). ஈஸ்ட்பேட்டை நகராட்சி பாடசாலையில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

சம்பவத்தன்று பாடசாலையில் சக நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது விளையாட்டாக சக மாணவர்கள் ஹர்‌ஷவர்தனை பள்ளி கழிவறையில் வைத்து தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டு வகுப்பறைக்கு சென்று விட்டனர். கழிவறையில் இருட்டாக இருந்ததால் பயத்தில் தவித்த ஹர்‌ஷவர்தன் கத்தி கதறி அழுதான்.

அந்த வழியாக வந்தவர்கள் சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து ஹர்‌ஷவர்தனை மீட்டு பாடசாலை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இதில் பயந்துபோன ஹர்‌ஷவர்தனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

அவரது பெற்றோர்கள் அங்குள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புங்கனூர் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் ஹர்‌ஷவர்தன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த புங்கனூர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ரெட்டி மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

பணியில் கவனக்குறைவாக இருந்த வகுப்பு ஆசிரியையை பொலிஸார் எச்சரிக்கை செய்தனர். மேலும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத்திலேயே அதிக அழகான ஆண் – இந்திய நடிகர் !! (சினிமா செய்தி)
Next post 2005, 2010, 2015, 2020 !! (கட்டுரை)