கடந்த சில வருடங்களில் நிறைய தவறுகள் செய்துவிட்டேன் !! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 29 Second

15 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் வருடத்திற்கு குறைந்து நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்துவிடுகிறார். தற்போது ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார் அவர்.

இந்நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய திரைப்பயணத்தில் பல தவறுகளை செய்திருப்பதாக கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தது பற்றித்தான் அவர் இப்படி பேசியுள்ளார்.

“கடந்த சில வருடங்களில் நான் பல தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால் திரும்பி பார்த்தால் அவை எனக்கு பல விஷயங்களை கற்றுத்தந்துள்ளன. நான் அவற்றை செய்யவில்லை என்றால் என்னுடைய பலம் என்ன என்று எனக்கு தெரியாமல் இருந்திருக்கும். தற்போது நான் தேர்ந்தெடுக்கும் கதைகள் என்னுடைய லிமிட்டை சோதிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என காஜல் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா ஏன் நிலாவின் மறுபக்கத்திற்கு விண்கலனை அனுப்பியது ? (வீடியோ)
Next post பருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது!! (வீடியோ)