தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 17 Second

சென்னையில் தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு பொலிஸார் அபராதம் விதித்த சம்பவம் நடந்தேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் – நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து பொலிஸாரிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இதுகுறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பொலிஸ் நிலையத்தில் இந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையிலும் இந்த ட்ரிக் தெரிஞ்சா அசால்ட்டா கார் ஓட்டலாம்!! (வீடியோ)
Next post ஜெயம் ரவி படத்தில் ஈரானிய நடிகை !! (சினிமா செய்தி)