கோலிவுட்டில் வழிகாட்ட யாருமே இல்லை!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 47 Second

இயற்கை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் குட்டி ராதிகா. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’கன்னட சினிமாவில் நுழையும்போது எனக்கு வயசு 14. சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. சினிமாவில் என்ன மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு என் குடும்பத்துக்கும் தெரியாது. எனக்கும் சின்ன வயது. கதைகூட கேட்காம எல்லா படத்துலயும் நடிப்பேன்.

தமிழ் சினிமாவுல ‘இயற்கை’ திரைப்படத்துல நடிக்கும்போது 15 வயசுதான். முதல் படமே தேசியவிருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ‘இயற்கை’ படத்தோட படப்பிடிப்புலதான் தமிழையே கத்துக்கிட்டேன். ஆனா அந்தச் சமயத்துல எனக்குப் படங்கள்ல நடிக்கிறது சம்பந்தமா கால்ஷீட் கொடுக்கறதுக்கும், கோலிவுட்டில் வழிகாட்டவும் யாருமே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா எனக்குத் தமிழ்ல நல்ல காட்பாதர் கிடைச்சிருந்தா கோலிவுட்டிலேயே செட்டில் ஆகிருப்பேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்க் சக்கர்பெர்க்கை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை!! (உலக செய்தி)
Next post சென்னையை நோக்கி குவியும் வாய்ப்புகள் ! (வீடியோ)