வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர் !! (உலகசெய்திகள்)

Read Time:1 Minute, 28 Second

பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்த பாதிப்பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறினார்.

பிரான்ஸில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

கடந்த வெயில் காலத்தில் அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பள்ளிகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை அங்கு இருந்திராத வெப்பநிலை பதிவானது.

ஆனால், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்மால் முடிந்ததை செய்வோம்!! (மகளிர் பக்கம்)
Next post எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்! (மருத்துவம்)