By 12 October 2019 0 Comments

மகிழ்ச்சி தந்த மருத்துவ அரங்குகள்!! (மருத்துவம்)

மணி (விற்பனை அதிகாரி, பைசன் கிளீனிங் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்)

‘‘பொதுமக்களின் உடல்நலத்துக்கு எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாத, வீட்டைச் சுத்தப்படுத்த உதவும் தரம் நிறைந்த பொருட்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதற்காக, சென்னையில் 1975-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. எங்களுடைய நீண்ட கால அனுபவத்தில் வல்லுநர்கள் ஒத்துழைப்புடன், கழிவறை உட்பட வீட்டின் எல்லா அறைகளையும் சுத்தம் செய்யப் பயன்படும் டாய்லெட் கிளீனர், சோப் ஆயில், கலர் ஃபினாயில், ஃப்ளோர் கிளீனர், ஹேண்ட் வாஷ், ஆசிட், பிளீச்சிங் பவுடர் என 40 வகையான பொருட்களை உயர்ந்த தொழில்நுட்ப தரத்துடன் உற்பத்தி செய்கிறோம். வீட்டை சுகாதாரமாகவும் அழகு மிளிரும் வகையில், பராமரிக்க உதவும் எங்களுடைய தயாரிப்புகள் உடல்நலத்துக்கு எந்தவகையிலும், கெடுதலை ஏற்படுத்தாது.

முக்கியமாக சோப் ஆயில், ஆசிட் போன்றவை தோலில் படுவதால், கொப்பளம் தோன்றுதல், தோல் சுருங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது. இவற்றில் இருந்து வெளிப்படும் நெடியைச் சுவாசிப்பதால் மூக்கிற்கு எவ்வித கெடுதலும் வராது. இதனுடைய புகையால், கண் எரிச்சல் அடையாது. தமிழகம் முழுவதும் எங்களுடைய தயாரிப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில் இவை கிடைக்கின்றன. இந்த எக்ஸ்போவை முன்னிட்டு, அனைத்து பொருட்களுக்கும் 50% தள்ளுபடி கொடுத்தோம். சிலருக்கு பக்கெட் ஒன்றையும் இலவசமாகக் கொடுத்தோம்’’.

லஷ்மணசாமி(அபிஇம்போர்ட்ஸ்&எக்ஸ்போர்ட்ஸ்)

‘‘இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் இருந்து உயர்தரமான தேக்கு மரங்களை இறக்குமதி செய்கிறது. அதன் பின்னர்தான் அம்மரங்கள், கட்டில், டைனிங் டேபிள், ஆஃபீஸ் மற்றும் கான்ஃப்ரென்ஸ் டேபிள், எக்ஸிகியூட்டிவ் டேபிள் மற்றும் சேர், விசிட்டர்ஸ் சேர் இந்திய பாணியில் வடிவமைக்கப்பட்ட கட்டல் என பலவிதமான பொருட்களாக தச்சுக்கலை வல்லுனர்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.

தரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்படும், கட்டில், மெத்தை நாற்காலிகள் என எதுவாக இருந்தாலும் உடலுக்குக் கேடு விளைவிக்கும். மனதுக்குப் புத்துணர்ச்சி தராது. உழைத்து, களைத்து வீடு திரும்பும் நபர்களுக்குப் புத்துணர்ச்சியும், போதுமான ஓய்வும் தேவை. அதைக் கருத்தில்கொண்டுதான் நாங்கள், புத்துணர்ச்சியையும், ஓய்வையும் ஒரே சமயத்தில் தருகிற ஜெல் மெத்தைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இதனால், எவ்வித தொந்தரவும் இல்லாமல், நிம்மதியாக உறங்க முடியும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். மனிதனின் உடல் ஆரோக்கியத்தில், முதுகு தண்டுவடம் முக்கிய பங்கு பெறுகிறது. எனவே, அந்த உறுப்பிற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத ஐரோப்பிய தரத்துடன் கூடிய மெத்தைகளை தென்னிந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்’’.

சல்மா பேகம்(மேேனஜிங் டைரக்டர், S5 ஹெல்த் கேர்)

‘‘Slim, Skin, Scalp, Saloon And Spa என்ற ஐந்து ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தான S-யைக் குறிக்கும் விதமாகத்தான், எங்களுடைய இந்த நிறுவனத்துக்கு S5 ஹெல்த் கேர் என பெயர் வைத்தோம். ஏனென்றால், பெண்களை அழகான, வசீகரமான தோற்றத்துடன் திகழச் செய்வதில், இந்த ஐந்து S-களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனாலும், நாங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த இந்த விஷயத்தில் ஆண்களை, எந்தக் காரணத்துக்காகவும் ஒதுக்குவது கிடையாது.

எனவே, 13 வயது தொடங்கி, 70 வயது வரை உள்ள பெண்களும், ஆண்களும் இந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது அவசியமானதும், பாதுகாப்பானதும் ஆகும். ஸ்லிம்மான உடல்வாகு, உடல் எடையைச் சீராக வைத்தல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமில்லாமல், நாங்கள் முடி உதிர்தல், பொடுகு, முகப்பருக்கள் முதலான பிரச்னைகளைக் குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம் .

இந்த முறையில், மருந்து, மாத்திரைகள் கிடையாது. தகுந்த மருத்துவ உபகரணங்கள் மூலமாகத்தான் சிகிச்சை கொடுக்கிறோம். உடல் முழுவதையும் வெண்மை நிறத்தில் மாற்றிக் கொள்வதற்கும் சிகிச்சை தருகிறோம். இவைத்தவிர, ஒரு மணிநேரத்துக்குள் தொப்பையின் அளவை ஒரு இன்ச் முதல் 6 இன்ச் வரை குறைக்கவும் செய்கிறோம். அரபுநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்த சிகிச்சைகள் அனைத்தும் தரப்படுகின்றன.

இந்தியாவில், முதல் தடவையாக இச்சிகிச்சைமுறை எங்களால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கென்று எங்களிடம் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோதெரபிஸ்ட் உள்ளனர். எங்களிடம் சிகிச்சை பெறுபவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

நாங்கள் தருகிற சிகிச்சையால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. அசோக் நகரைத் தலைமையகமாகக் கொண்ட எங்களுடைய ஹெல்த் கேர் மையத்தை அண்ணா நகர், தியாகராய நகர் போன்ற பகுதிகளிலும் ஆரம்பிக்கத் திட்டமிட்டு உள்ளோம்’’.இளமை இனிமேல் போகாது!

டாக்டர் எம். கண்ணன்(அகத்தியர் பிரணவ பீடம்)

‘‘2017-ம் ஆண்டு கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு, அகத்தியர் பிரணவ பீடம் ஆரம்பிக்கப்பட்டது. ரத்தம் மற்றும் நரம்பு தொடர்புடைய நோய்கள், கண் பார்வை கோளாறு, இதய நோய்கள், பரம்பரை ஆஸ்துமா, அனைத்துவிதமான வயிற்றுப்புண்கள், மன அழுத்தம், கர்ப்ப பை நீர்க்கட்டி, மார்பக கட்டி, உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டி, சிறுநீரக கற்கள், தண்டுவட பிரச்னை, மூளை வளர்ச்சி இன்மை, ஆண், பெண் மலட்டுத்தன்மை, பாத நோய்கள் முதலானவை அகத்தியர் பிரணவ பீடம் மூலம் சரி செய்யப்படுகிறது.

இதற்கு நாங்கள் ஒரேயொரு சிகிச்சை முறையைதான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அதாவது, ரத்தத்தைச் சுத்தம் பண்ணி, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுவதுதான் இதற்கான சிகிச்சை முறை. ஆகும். ஒருவரின் உடல் நிலையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் அமையும்.

இதில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. காலை 6 மணிக்கு நாங்கள் தருகின்ற மருந்தை உட்கொண்ட பின்னர், 2 மணிநேரம் கழித்துதான் ஆகாரம் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சையின்போது, நிறைய தண்ணீர்(3 லிட்டர்) அருந்த வேண்டும். இது ஒன்றுதான் நாங்கள் சொல்கின்ற கட்டுப்பாடு. சிகிச்சைக்குப் பின்னர், எவ்வளவு வயதானவராக இருந்தாலும் இளமை தோற்றம் பெறுவார்’’.Post a Comment

Protected by WP Anti Spam