வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகாமல் இருக்க..!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 12 Second

அழகே… என் ஆரோக்கியமே…

அழகு, இளமை எல்லாமே கொஞ்ச காலம் என்பது உண்மைதான். ஆனால், காலம் கடந்தும் ரசிக்கும் அழகோடு இருக்க முடியும். வயதாவதற்கேற்ப உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர்ந்து, அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும். வயதாவதை நாம் ஒரு பிரச்னையாக நினைத்து வருந்த வேண்டியிருக்காது. அதை எளிதில் எதிர்கொள்ளவும் முடியும். ‘வயசானாலும் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகல’ என்று ரஜினியைப் பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொல்வதைப் போல, நம்மைப் பார்த்தும் எல்லோரும் சொல்வார்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும்?!

நாம் இதற்கு முன்னரே சொன்ன விஷயங்களான Cleaning, Toning, Moisturizers மற்றும் Sunscreen போன்றவை தோலின் மேல்புறத்தை மட்டுமே பாதுகாப்பவை. தோலின் உள்ளேயும் சில மாற்றங்கள் நடக்கும். அப்படி என்றால் உள்ளே என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? அதை எப்படி எதிர்கொள்வது?

உள் தோலில் நடக்கும் விஷயங்களை Intrinsic Ageing மற்றும் Extrinsic Ageing என்று பிரிக்கலாம். Intrinsic Ageing என்பது எல்லாருக்கும் நடைபெறுவது வயது ஆக ஆக இது அனைவருக்குமே வந்துதான் ஆகும். ஆனால், Extrinsic Ageing- புறக்காரணிகளால் வருபவை.
இவை நம் வயதான தோற்றத்திற்கு எப்படி காரணங்களாகின்றன? அதை எப்படி தவிர்க்கலாம்?

புற ஊதாக் கதிர்கள்

UVA மற்றும் UVB நம் தோலில் உள்ள முக்கிய என்சைமான(Enzyme) Matrix metalloproteinase-ஐ தூண்டிவிட்டு நம் உள் தோலில் இருக்கும் Collagen- ஐ சேதம் செய்யும். இதைத் தவிர்ப்பதற்கு சன் ஸ்கிரீன் கிரீம்களை உபயோகிக்க வேண்டும்.

நாள்பட்ட மன அழற்சி

ஒரு சிலர் எப்போதுமே பதற்றமாகவோ அல்லது கவலையுடனோ இருப்பார்கள். இந்த Chronic Psychological Stress கவலையினால் இவர்களது உடலில் சில வகை ஹார்மோன்கள் சுரந்துகொண்டே இருக்கும். இதற்கு மனதை லேசாக வைத்துக் கொள்வது கூட தோலுக்கு நல்ல பலன் அளிக்கும். உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சவால்கள் வருவதும் அதை எதிர்கொள்வதும்தான் வாழ்க்கை. இந்த சின்ன விஷயத்தை புரிந்துகொண்டாலே நாம் காலையில் எழும்போது இன்னைக்கு என்ன சவால் வரப்போகிறது? அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற மனப்பக்குவம் ஏற்பட்டு, எந்தப் பிரச்னையையும் எளிதாக சமாளிக்கலாம். நம் இளமை ரகசியத்திற்கு, நம் சந்தோஷமே முக்கிய காரணி.

அதிக கலோரிகள் நிறைந்த உணவு

தேவைக்கு மீறி நாக்கின் சுவைக்காக அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உடலை கட்டுக்குள் வைக்க அதிக Insulin நம் உடலில் சுரக்க வேண்டிய நிலை ஏற்படும். அதிக இன்சுலின் சுரக்கும்போது, கூடவே, அதிக Insulin- Like Growth Factors-ம் சுரக்கும். அவ்வாறு சுரப்பதால் முகம், கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் தோல் அழுத்தமாகி, கறுத்துப் போய்விடும். தோல் சுருங்கி கறுத்துப் போகாமல் இருக்க, அதிக இனிப்புள்ள உணவுகளை தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சருமத்தை நன்றாக பராமரிக்க என்ன சாப்பிடலாம்?

சருமம் சுருங்குவதற்கு இன்னுமொரு காரணம் Reactive Oxygen species. இதை கட்டுக்குள் கொண்டுவர Antioxidants நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடச் ெசால்வதற்கு இதுதான் காரணம். தக்காளியில் Lycopene, கேரட்டில் Carotenoids, ஸ்ட்ராபெர்ரியில் Ellagnin உள்ளது.

இப்படி ஒவ்வொரு காய் மற்றும் பழத்திலும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. பசிக்கும்போதோ, தாகமெடுக்கும் போதோ வெறும் Empty Calories நிறைந்த குளிர்பானங்களை அருந்தாமல், பழங்களையும், காய்கறிகளையும், முளை கட்டிய தானியங்களோடு சேர்த்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாவது மட்டுமல்லாமல் மூளை மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்.

வயதாவதால் நம் சருமத்தில் என்ன மாற்றங்கள் உண்டாகிறது?

* மேல் தோலில் உள்ள நீர் சத்து குறையும்.
* ேதாலின் எதிர்ப்பு சக்தி குறையும்.
* தோலின் எண்ணெய் சத்தும், வியர்வையும் குறையும்.
* வைட்டமின் `D’ உருவாவது குறையும்.
* உடலின் தட்பவெப்ப நிலையை சமநிலையில், கட்டுக்குள் வைக்க முடியாது.
* காயங்கள் ஆற நாளாகும்.
* தொடு உணர்ச்சி குறையும்.
* செல்கள் நீங்கும் இடங்களில்், சரியான முறையில் புது செல்கள் உருவாகாது.

20 வயது உள்ளவர்கள் முகத்தை கூர்ந்து கவனித்தால் அவர்களின் நெற்றி நன்கு மேடாகவும், கன்னங்கள் நன்கு புஷ்டியாகவும், மோவாய் நன்கு கூர்மையாகவும் இருப்பதை பார்க்கலாம். இது ஒரு தலைகீழ் முக்கோணம்போல் இருக்கும். ஆனால், 50-60 வயது உள்ளவர்களை கவனித்து பார்த்தால் நெற்றியில் கோடுகளும், கன்னங்கள் தொய்ந்தும், மோவாய் சுருங்கியும், மூக்கின் அருகே கோடுகளும் உருவாகி, கழுத்தில் சுருக்கங்கள் உண்டாகி, அவர்களின் முக அமைப்பு நேரான ஒரு முக்கோணம்போல் இருக்கும். இதை நாங்கள் Reversal of Triangle with Ageing என்று அழைப்போம்.

இது மட்டுமல்லாமல் புருவங்களும் கண் இமையும் தொங்கிப் போய், கண்களும் பொலிவிழந்து, கண்களின் கீழே ஒரு பை போல் உருவாகி, அதன்கீழே ஒரு பள்ளம் கூட உருவாகும். இதை Brow Ptosis, Eyelid Ptosis, Tired Eyes, Tear Trough Deformity என்றழைப்போம். அது மட்டுமில்லாமல், காதுகள் நீண்டு, மூக்கின் நுனி தாழ்ந்து, மேலுதடு மெல்லியதாகி விடும். கன்னங்கள் கழுத்து சேருமிடத்தில் தோல் தொய்ந்துவிடும்.

நம் முகத்தில் தோல், தசை, எலும்பு மட்டுமல்ல, சில வகை கொழுப்பு பட்டைளும் (Fat Pads) உள்ளன. வயதாகும்போது இந்த எலும்பு தேய்ந்து, கொழுப்பு பட்டைகள் தளர்ந்துவிடும். அது மட்டுமில்லாமல் தசைகளை சரியான இடத்தில் வைக்க ஜவ்வுகள் போன்ற Ligaments-ம் இருக்கும். இந்த Ligaments தன் இடத்தில் இருந்து தொய்வடைந்தால் தசைகளும், கொழுப்பு பட்டைகளும் தளர்ந்துவிடும். இதுவே முகத்தின் வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணம். பூமியின் புவியீர்ப்பு விசையும் இந்த மாற்றங்கள் ஏற்பட ஒரு காரணம்.

சரி… இதையெல்லாம் தவிர்ப்பதற்கு நான் என்னென்ன செய்ய வேண்டும்?
சருமத்தின் நிறம் மங்காமல் இருப்பதற்கும், பொலிவு பெறுவதற்கும் Microdermabrasion செய்துகொள்ளலாம். Aluminium oxide crystals உதவியுடனோ அல்லது Diamond tip உதவியுடனோ இறந்த தோல் செல்களை நீக்குவார்கள். தற்போது Hydra Dermabrasion என்ற முறையில் தண்ணீரின் உதவியுடனும் இதைச் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மாதம் ஒருமுறை 4-5 தடவைகளும், அதன்பின் 3 மாதங்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

முகத்தின் பொலிவிற்கு மாதம் ஒருமுறை Superficial chemical peel செய்துகொள்ளலாம். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் அல்லது மங்கு இருந்தால் Glycolic Acid அல்லது Trichloroacetic Acid போன்ற Chemical peel உபயோகிப்பதை மாதம் ஒருமுறை அல்லது அந்த கரும்புள்ளிகள் மறையும் வரை அல்லது குறையும் வரை தொடர வேண்டும்.

சிலருக்கு இது மறைய 4-6 மாதங்கள் கூட ஆகலாம். ஒரு சிலருக்கு 6-12 மாதங்கள் வரை செய்தால்தான் ஓரளவாவது குணம் தெரியும். முகம் மிகவும் சுருக்கம் ஏற்பட்டு இருந்தால் Retinol உள்ள Yellow peel -ஐ உபயோகிப்பார்கள். முகச்சுருக்கங்கள் நன்றாக நீங்க Deep chemical peel-ம் உதவும். ஆனால், இந்த சிகிச்சைமுறைகளைச் செய்து, நல்ல பலன் கிடைத்த பிறகும், அந்த பலனை தக்க வைத்துக் கொள்ள சிலவகை Night cream-களையோ அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை Chemical peel சிகிச்சையையோ தொடர வேண்டும்.

சின்னச்சின்ன சுருக்கங்களுக்குத்தான் இந்த கெமிக்கல் பீல் சிகிச்சை பலன் அளிக்கும். முகத்தில்/நெற்றியில் பேசும்போது அதிக கோடுகள் ஏற்பட்டால், சிரிக்கும்போது கண்களைச்சுற்றி கோடுகள் ஏற்படுபவர்கள் Botox Injection-ஐ போட்டுக்கொண்டால் அந்த கோடுகள் தற்காலிகமாக மட்டும் மறையும். ஆகையால் ‘போடாக்ஸ்’ சிகிச்சையை 4 மாதங்களுக்கு ஒருமுறை இவர்கள் செய்துகொள்ள வேண்டும்.

முகத்தில் கோடுகள் நிரந்தரமாகவே இருந்தால் (அதாவது ஒருவர் பேசாமல், சிரிக்காமல் இருந்தால்கூட) நெற்றியில், கண்ணைச்சுற்றி, கண்ணின் கீழே, மூக்கின் அருகில், வாயைச்சுற்றி, கழுத்தில் இருந்தால் அவர்களுக்கு Fillers சிகிச்சை தேவைப்படும். கழுத்தில் கோடுகள் நிறைய இருப்பவர்களுக்கு போடாக்ஸ் செய்து, பின் தேவைப்பட்டால் Fillers-ம் போடலாம். சிலருக்கு கன்னம் கழுத்தோடு சேரும் இடம் மிகவும் தொங்கிப்போய் இளமையாகவே தெரிய மாட்டார்கள். அவர்களுக்கு Fillers ஒரு வரப்பிரசாதம்.

இதை ஒன்றரை அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறை செய்தால் போதும். அது மட்டுமல்லாமல் கன்னங்கள் தொய்வடைந்திருந்தால் அல்லது சின்னச்சின்ன சுருக்கங்கள் முகத்தில் இருந்தால் Radio frequency tightening-கூட செய்துகொள்ளலாம். ஆனால் இந்த சிகிச்சை வாரம் ஒரு முறை என்று தொடர்ந்து, 6-8 வாரங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். இருந்தாலும், இதனால் அதிக பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 20-30% வரை முன்னேற்றம் ஏற்படலாம்.

மேற்சொன்ன அனைத்து சிகிச்சைகளும் நிஜமாகவே பலனளிக்குமா? என்ற சந்தேகம் இருந்தால் இந்தி நடிகை ரேகா மற்றும் ஹேமமாலினியின் புகைப்படத்தையும், இதையெல்லாம் செய்துகொள்ளாத நம் தமிழ் நடிகைகளின் முகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அடிப்படை விஷயங்களான Cleaning, Toning, Moisturizers மற்றும் Sunscreen இந்த நான்கில் கவனம் செலுத்தினாலே, மற்ற சிகிச்சைகளுக்கு தேவையிருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் பிரபலமான சப்ளிமெண்ட்!! (மருத்துவம்)
Next post கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…!! (அவ்வப்போது கிளாமர்)