டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 33 Second

கொஞ்சம் மனசு

காரணமே இல்லாமல் அதிக களைப்பாகவும் மனது சரியில்லாமலும் உணர்கிறீர்களா… அது டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறீர்களா… அதைத் தெரிந்துகொள்ளத்தான் இந்த டிப்ஸ்…

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சோகமும் கவலைகளும் ஏற்படுவது சகஜம். அது அடிக்கடி ஏற்பட்டால் கீழ்க்கண்ட அறிகுறிகளை கவனியுங்கள்.

* குறிப்பிடும்படி எந்த சம்பவமும் நடக்காமலே வருத்தம், படபடப்பு ஏற்படுவது.

* எதிலும் நம்பிக்கையே இல்லாதது போல உணர்வது… இந்த நம்பிக்கையற்ற உணர்வுகள் நீங்காமல் தொடர்வது.

* வாழ்க்கையில் ஒரு காலத்தில் நீங்கள் ரசித்துச் செய்த எந்த விஷயத்திலும் திடீரென ஆர்வமோ ஈடுபாடோ இல்லாமல் போவது… உதாரணத்துக்கு உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள், உங்கள் வேலைகளில் நாட்டம் குறைவது, பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விலகி இருக்கத் தோன்றுவது.

* உங்களுடைய தூக்கம் மற்றும் உணவுப்பழக்கங்களில் தாறுமாறான மாற்றங்களை உணர்வது.

* உடல் எடை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது.

* சின்ன விஷயங்களில் கூட கவனக் குறைவு ஏற்படுவது மற்றும் அவற்றில் முடிவெடுக்க முடியாமல் திணறுவது.

* வாழ்க்கையில் நாம் எதற்குமே லாயக்கில்லாதவர் என நினைப்பது, காரணமின்றி குற்ற உணர்வில் தவிப்பது, வாழ்வதே வீண் என்று நினைத்து அடிக்கடி மரணத்தைப் பற்றி சிந்திப்பது…

மேலே சொன்ன அறிகுறிகளும், உணர்வுகளும் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் உங்களுக்கு கடுமையான மனச்சோர்வு ஏற்பட்டிருக்கலாம். எனவே, தாமதிக்காமல் உடனடியாக மனநல மருத்துவர் அல்லது உளவியல் ஆலோசகரை சந்தித்து தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது நல்ல மன மாற்றத்தைத் தரும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வியல் தரிசனம் ! (கட்டுரை)
Next post காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)