செவ்வாய், நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன் மாதிரி அறிமுகம்!! (கட்டுரை)

Read Time:2 Minute, 3 Second

செவ்வாய் மற்றும் நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மாதிரியை, ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலன் மஸ்க் அறிமுகப்படுத்தினார். அடுத்த சில மாதங்களில் ஸ்டார்ஷிப் விண்வெளியை நோக்கி புறப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார். நிலவு, செவ்வாய் மற்றும் அதையும் தாண்டி சனி கிரகம் வரை கூட செல்லக் கூடிய வகையிலான விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்து வருகிறது. இந்த விண்கலத்திற்கு ஸ்டார்ஷிப் எம்.கே.1 எனப் பெயரிடப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலம் கேமரன் கவுண்ட்டி என்ற இடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில், ஸ்டார்ஷிப் எக்.கே.1-ன் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் ஸ்டார்ஷிப்பின் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், அப்போது 20 கிலோ மீட்டர் உயரம் வரை பறந்து மீண்டும் பாதுகாப்பாக தரை இறங்கும் செயல் முறை குறித்து சோதனை செய்து பார்க்கப்படும் எனக் கூறினார். ஸ்டார்ஷிப் விண்கலத்தில் 100 பேர் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார். 50 மீட்டர் அகலத்துடன் கூடிய ஸ்டார்ஷிப், 200 டன் எடை கொண்டது என்றும், முடிந்தவரை அடுத்த ஆண்டில் விரைவாக விண்ணில் ஏவுவதற்கு 50 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாகவும் எலன் மஸ்க் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசைவ உணவு ஆரோக்கியமாக…!! (மருத்துவம்)
Next post வடிவேலுவின் கதை | வடிவேலு அரசியலில் வீழ்ந்த கதை!! (வீடியோ)