வெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா !! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 2 Second

திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் தொடரான ‘தி பேமிலி மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயே, பிரியாமணி, ஷரீப் காஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரில் இரண்டாம் பாகத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை தயாரித்த அமேசான் பிரேம் ஒரிஜினல் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.

முதல் பாகத்தை இயக்கிய ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணா ஆகியோரே, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்களாம். பல படங்களை கையில் வைத்திருக்கும் சமந்தா, இந்த வெப் தொடர் தன்னை இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கும் என்று கூறி வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன் !! (கட்டுரை)
Next post அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – பலியானோர் எண்ணிக்கை 38!! (உலக செய்தி)