பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்? (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 10 Second

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.

அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம்.

ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் எனது அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான வி‌ஷயம் ஆகும்.

ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிகப்பெரிய நடிகர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த வி‌ஷயமாகும்.

அப்பா அம்மா இருவரும் பிரிந்தது கஷ்டமாக இருந்தாலும் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகியது.

என் அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் தான் இருப்பார்கள். அதனால் தான் நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இவ்வாறு சுருதிஹாசன் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் !! (உலக செய்தி)
Next post இரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை!! (மருத்துவம்)