திடீர்னு மூச்சடைச்சா என்ன பண்ணுவீங்க? (மருத்துவம்)

Read Time:3 Minute, 38 Second

உணவு உண்ணும்போதோ அல்லது திடீரென்றோ சிலருக்கு மூச்சுக்குழாய் அடைத்துக்கொள்ளும். ஒருவருக்கு மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டால், அதை சுட்டிக்காட்ட தானாகவே கழுத்துப் பகுதிக்குக் கைபோகும். இந்த சமிக்ஞையை ‘யுனிவர்சல் சைன்’ என்பார்கள். திடீரென தங்கள் கழுத்துப் பகுதியில் கைவைத்தபடி யாராவது தவித்துக்கொண்டிருந்தால் அது திடீர் மூச்சுக் குழாய் அடைப்பாய் இருக்கக்கூடும்.

அவரிடம் மூச்சுக்குழாய் அடைத்திருகிறதா என முதலில் கேட்க வேண்டும். அவர் கஷ்டப்பட்டு ஆமாம் என்று சொன்னால் நன்றாக இருமச் சொல்லுங்கள். அதிலேயே குணமாகக்கூடும். ஒருவேளை அவரால் பேச இயலாமல் செய்கையால் ஆமாம் என்று சொன்னால் ஹெம்லிச் மேனியூவர் (Hemilich maneuver) எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவருக்குப் பின்புறம் நின்றுகொள்ளவும். அவரது தொப்புள் பகுதியில் இடது கையை குத்துவது போல வைக்கவும்.

தற்போது, வலது கையை இடது கையின் மேல் வைத்து, வயிற்றுப்பகுதியில் இருந்து நன்றாக மேல்நோக்கி அழுத்தம் தரவும். இப்படி அழுத்தம் தரும்போது, மூச்சுக் குழாயில் அடைத்துகொண்டிருக்கும் உணவு, வெளியே வந்துவிடும். முதலுதவி கொடுக்கத் தாமதப்படுத்தினால் இரண்டு மூன்று நிமிடங்களில் இதயத்துடிப்பு நின்றுவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனம் தேவை.

குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயில் உணவு அடைத்துக்கொள்ளும் பிரச்சனை அதிக அளவில் இருக்கும். ஏனெனில், சில குழந்தைகள் நாணயங்கள், பட்டாணி, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கிவிடுவார்கள். இதற்கு, சிலர் தலைகீழாகக் குழத்தைகளைப் பிடித்துத் தட்டுவார்கள். இது தவறு; இப்படிச் செய்யக் கூடாது. ஒரு கையில் குழந்தையைச் சாய்வாகப் பிடித்துக்கொண்டு, இரண்டு விரல்களை வைத்து அதன் நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பின்னர், குழந்தையைத் திருப்பி வைத்து, உள்ளங்கையால் சில முறை முதுகில் தட்ட வேண்டும். மூச்சுத்திணறல் ஏற்படும்போது தலையில் தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை, சிலர் குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு உணவுப்பொருளை வெளியே எடுக்க முயலுவார்கள். இதனால்,சில சமயம் உணவு மூச்சுக் குழாயின் உட்புறம் தள்ளிவிடப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனம் தேவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் அவரை காதலிக்கிறேன்!! (சினிமா செய்தி)
Next post கடி சக்ராசனம்…!! (மகளிர் பக்கம்)