தேங்காயின் மகத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 8 Second

நம்முடைய அன்றாட சமையலில் தேங்காய் மிகவும் பிரதான இடம் வகித்து வருகிறது. இட்லிக்கு சட்னியாக இருந்தாலும், பொரியலுக்கு அலங்கரிக்க, குருமா குழும்பு, காரக்குழம்பு என பல உணவுகளில் தேங்காய் சேர்க்காமல் இருக்க மாட்டோம்.தேங்காயை அப்படியே பயன்படுத்துவது மட்டும் இல்லாமல், அதன் எண்ணெயும் நமக்கு பெரிய அங்கமாக உள்ளது. சருமத்தில் காயம் ஏற்பட்டால் அதன் தழும்பை போக்க தேங்காய் எண்ணெய் மிகவும் உகந்தது. இதனாலேயே சித்த மருத்துவத்தில் தேங்காயை மருத்துவத்தின் அடையாளச் சின்னமாக குறிப்பிடுகிறார்கள். தேங்காயில் பல்வேறு மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன.

* புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

* தேங்காய் எண்ணெய் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

* தேங்காய் எண்ணெய் கொண்டு சமைத்து வந்தால், நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

* சருமத்தில் ஏற்பட்ட தீப்புண்கள் விரைவில் குணமாக தேங்காய் எண்ணை தடவி வரலாம். தழும்பு ஏற்பட்டது தெரியாமல் மறைந்து
விடும்.

* கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.

* தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

* தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்த உதவுகிறது.

* தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப்பால் உகந்தது.

* குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப்பாலில் உள்ளன. தேங்காய்ப்பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

* பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் சாப்பிட்டால் அந்த பிரச்னை குணமாகும்.

* தேங்காய்ப்பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

* தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப்பால் மிகவும் சிறந்தது.

* உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தேங்காயில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்கால கொண்டாட்டம்!! (மகளிர் பக்கம்)
Next post அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!! (அவ்வப்போது கிளாமர்)