சர்க்கரைக்கு சரியான மாற்று?! (மருத்துவம்)

Read Time:4 Minute, 40 Second

வெள்ளை சர்க்கரையைத் தவிருங்கள்’ என்று மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அதற்கு சரியான மாற்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது Tagatose என்று அழைக்கப்படுகிற சர்க்கரை. அமெரிக்காவின் Tufts University-ஐச் சேர்ந்த உதவி பேராசிரியர் நிகில் நாயர், முதுகலை முனைவர் பட்ட ஆய்வாளர் ஜோசப் போபர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. Nature Communications இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், ‘டாகடோஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் அது பல் குழிகளை(Tooth cavities) ஏற்படுத்தாது’ என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறது. பழங்கள் மற்றும் பால் பொருட்களிலிருந்து டாகடோஸ் இனிப்பானது பெறப்படுகிறது. ஆனாலும் அவற்றில் மிகுதியாக இல்லை என்பதால், செயற்கையான முறையில் அதே மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே இந்த உற்பத்தி செயல்முறை மூலப் பொருட்களிலிருந்து எளிதில் பெறப்பட்ட Galactose-லிருந்து டேகடோஸாக மாற்றுவதை உள்ளடக்கி இருக்கிறது.குறைந்த கலோரி, குறைந்த Glycemic Index கொண்ட இந்த சர்க்கரையின் வணிகத் திறனுக்கான திறவுகோலாக இந்த செயல்முறை இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்காக பாக்டீரியாவை சிறிய உயிரியக்கிகளாக (Bioreactors) பயன்படுத்தி நொதிகளையும் எதிர்வினைகளையும் இணைக்கும் ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி 85 சதவீதம் வரை டாகடோஸை உற்பத்தி செய்தனர். ஆய்வக நிலையில் உள்ள இந்த செயல்முறை வணிகரீதியான உற்பத்திக்கு செல்வதற்கு இன்னும் பல படிகள் இருந்தாலும், அதிக அளவிலான இந்த உற்பத்தி முறை டேகடோஸை ஒவ்வொரு பல்பொருள் அங்காடியின் அலமாரிக்கும் கொண்டு சேர்க்க எதிர்காலத்தில் வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கேலக்டோஸிலிருந்து டேகடோஸை உருவாக்க தேர்வு செய்யும் நொதி (Enzyme) எல்-அரோபினோஸ் ஐசோமரேஸ் (L-arabibose isomerase LAI) என்று அழைக்கப்படுகிறது. Lactobacillus plantarum ஒரு உணவு பாதுகாப்பான பாக்டீரியம். இதன் மூலம் அதிகளவு LAI நொதியை உருவாக்கி, பாக்டீரியா செல் சுவரின் எல்லைக்குள் அதை பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும் வைத்திருக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கேலக்டோஸை டாகடோஸாக மாற்றுகிறபோது, LAI நொதி 37 டிகிரி செல்சியஸில் 47 சதவீதம் அளவில் அதன் உருவாக்கத்தை உயர்த்துவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நொதி பாக்டீரியா செல்லுக்குள் நிலையாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் டாகடோஸ் உருவாக்கத்தை 85 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்கின்றனர்.

இந்த ஆய்வுகள் முழுமையான வெற்றி அடைகிறபோது, அது தங்களுக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துமா என்பதே நீரிழிவு நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. Tagatose சர்க்கரைக்கு மாற்றுப் பொருளாக இருக்குமா, அதன் உலோக சுவை அல்லது புற்றுநோய்க்கான காரணிகள் போன்ற பிரச்னைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!! (மருத்துவம்)
Next post மருந்தே…!! (மருத்துவம்)