சர்க்கரைக்கும் கட்டுப்பாடு வேண்டும்!! (மருத்துவம்)
இன்றைய உணவு பழக்கங்களில் மளமளவென உயர்ந்து வரும் மற்றுமொரு பொருள் சர்க்கரை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராமும், அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24 கிராமும் தான். அதாவது சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் (24 கிராம்). இந்த அளவு சர்க்கரையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஆனால் தற்போதைய நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது. இனிப்பு வகைகளில் மட்டும் சர்க்கரை சேர்த்தது போய், இப்போது எல்லாவற்றிலுமே சர்க்கரையைக் கலக்கிறார்கள்.
இனிப்பான பழங்களை ஜூஸ் போடும்போது கூட, அதனுடன் சர்க்கரையை கலந்து தான் குடிக்கிறோம். காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைக்குள்ளேயே இருக்கிற சர்க்கரைகள், உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால் நம் உணவுப் பொருட்களில் கலக்கப்படும் சர்க்கரை தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது, குளிர்பானங்கள், டீ, காபி, பிஸ்கட், இனிப்பு பண்டங்கள், ஜாம், சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக் போன்றவைதான் ரிஸ்க். 1750-ம் ஆண்டில் ஒரு நபரின் சர்க்கரை பயன்பாட்டின் அளவு வருடத்திற்கு இரண்டு கிலோவாக இருந்தது.
இது 1850 -ம் ஆண்டில் பத்து கிலோவாகவும், 1994-ம் ஆண்டில் 60 கிலோவாகவும், 1996-ம் ஆண்டில் ஒரு நபரின் சர்க்கரை பயன்பாட்டின் அளவு 80 கிலோவாகவும் உயர்ந்துள்ளது. சராசரியாக வாழ்நாளில் நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு இரண்டு டன் என்ற அளவில் உள்ளது. சர்க்கரையை அதிகம் உண்பதால் இதன் விளைவாக, சர்க்கரை வியாதி, இதய நோய்கள், உடற்பருமன், அதிக கொலஸ்டிரால் கொழுப்பு கல்லீரல் நோய் (fatty liver) போன்ற நோய் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Average Rating