By 30 December 2019 0 Comments

ஜெனீவா விவ­கா­ரத்தில் அவ­ச­ரப்­ப­டாத அரசு!! (கட்டுரை)

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷவின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்­துக்கு, எதிர்வரும் புதன்­கி­ழமை பிறக்கப் போகின்ற, 2020ஆம் ஆண்டு சிக்­கல்­களுடன் தான் தொடங்கப் போகிறது.
இந்த அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து தேர்தல் நடத்­து­வ­தற்கு முன்­ன­தா­கவே, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் சவாலை எதிர்கொள்ள வேண்­டி­யி­ருக்கும்.

பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதிர்வரும், மார்ச் 3ஆம் திகதி தான் கிடைக்கப் போகி­றது. அதற்கு ஒரு வாரத்­துக்கு முன்­ன­தா­கவே, ஐ.நா. மனித உரி­மைகள் பேரவையின் கூட்­டத்­தொடர் ஆரம்பமாகி விடும்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­டரை எதிர்­கொள்­வ­தற்கு புதிய அர­சாங்கம் இப்­போதே தயா­ராகி வரு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

தற்­போது ஆட்­சியில் இருக்­கின்ற அர­சாங்கம், 2014ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கடு­மை­யான அழுத்­தங்­களை எதிர்­கொண்­டி­ருந்த நிலையில் தான், பத­வி­யிலிருந்து வெளி­யே­றி­யி­ருந்­தது.
2015இல் ஆட்­சிக்கு வந்த மைத்­திரி-– ரணில் கூட்டு அர­சாங்கம் தான் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு இருந்து வந்த நெருக்­க­டியை குறைத்­தி­ருந்­தது.

ஜெனீவா நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து நிரந்­த­ர­மான விடு­ப­டு­த­லாக அது இருக்­க­வில்லை. மாறாக, ஐ.நா மனித உரிமைகள் பேர­வையின் தீர்­மா­னத்­துடன் இணங்கிச் செயற்­ப­டு­வ­தாக, இணை அனு­ச­ர­ணையை வழங்கி, வாக்­கு­றுதி அளித்­ததன் பேரில், இலங்­கைக்கு கால­அ­வ­காசம் அளிக்­கப்­பட்­டது.

அந்தக் கால­அ­வ­கா­சத்தை வைத்தே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம், ஜெனீவா தீர்­மான கடப்­பா­டு­களை நிறை­வேற்­றாமல், அங்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களைப் பற்­றிய எந்தக் கவ­லையும் இல்­லாமல், காலத்தை ஓட்டி­விட்டு, போய் விட்டது.

இப்­போது புதிய அர­சாங்கம் ஜெனீவா ஓட்­டத்­துக்குத் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றது. இது ஒரு அஞ்­ச­லோட்டம் போல ஆகி­விட்­டது.
ஆனால், முன்­னைய அர­சாங்கம் விட்ட இடத்­தி­லி­ருந்து ஓட்­டத்தை தொடங்க, இப்­போ­தைய அர­சாங்கம் தயா­ராக இல்லை. இதுதான் பிரச்­சினைக்­கு­ரிய விட­ய­மாகவுள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் ஜெனீ­வாவில் இணங்கி அளித்த உறுதி­மொ­ழிகள் அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­னவை என்றும் அவை நாட்டின் இறை­யாண்­மைக்கு எதி­ரா­னவை என்றும் தற்போ­தைய அர­சாங்கம் கூறு­கி­றது,
தாம் ஆட்­சிக்கு வந்தால் ஜெனீவா தீர்­மானம் கிழித்­தெ­றி­யப்­படும் என்று கோத்­தா­பய ராஜபக் ஷ, ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­னரே கூறி­யி­ருந்தார். அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்று ஆட்­சிக்கு வந்த பின்­னரும் தெளி­வாக கூறி­வ­ரு­கிறார்.

ஆனாலும், அவர் ஆட்­சிக்கு வந்த பின்னர், ஜெனீவா தீர்­மா­னத்­துக்­கான இணை அனு­ச­ர­ணையிலிருந்து விலகிக் கொள்­வ­தா­கவோ, அந்த உடன்­பாட்டை கிழித்­தெ­றிந்து விட்­ட­தா­கவோ அறி­விக்­க­வில்லை.
ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அளித்த பல வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு கோத்­தா­பய ராஜபக்ஷ அவ­ச­ரப்­ப­ட­வில்லை. ஏனென்றால் அவை சிக்­க­லா­னவை. ஒன்றில் கை வைத்தால் இன்­னொரு பிரச்­சி னையைக் கொண்டு வந்து விடக் கூடியவை. உதா­ர­ணத்­துக்கு, தாம் வெற்றி பெற்றால், நவம்பர் 17ஆம் திகதி காலையில், குற்­றச்­சாட்­டு­களின் பேரில் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள புல­னாய்வுப் பிரி­வினர் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள் என்று வாக்­கு­றுதி அளித்திருந்தார்.

அது­போ­லவே, அர­சியல் கைதிகள் அனை­வரும் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள் என்றும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. எனினும் அதற்கு தெளி­வான கால­வ­ரை­யறை எதுவும் அளிக்­கப்­ப­ட­வில்லை.
நவம்பர் 17 ஆம் திகதி வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்ட கோத்­தா­பய ராஜபக் ஷ, ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று ஒன்­றரை மாதங்­க­ளா­கியும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள புல­னாய்வுப் பிரி­வி­னரை விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

அது­போ­லவே தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையும் நடக்­க­வில்லை. இது உட­ன­டி­யாக செய்வதும் சாத்­தி­ய­மில்லை. சிறிது காலம் செல்லும் என்று அர­சாங்கத் தரப்பு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கூறி­யி­ருக்­கிறார்.

இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வி­னரின் விடு­தலை விட­யத்­திலும், தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்­திலும் அவ­ச­ரப்­பட்டு உத்­த­ர­வு­களை வழங்க ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தயா­ராக இல்லை. ஏனென்றால் அது நீதித்­து­றை­யு­ட­னான மோதல்­க­ளுக்கு கார­ண­மாகி விடக்­கூடும் என்ற நிலை உள்­ளது.
அது­போ­லவே, அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­பாடு மீளாய்வு செய்­யப் ­படும் என்றும் வாக்­கு­றுதி அளித்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ.
ஆட்­சிக்கு வந்த பின்­னரும் அதனைக் கூறிக் கொண்­டி­ருந்­தவர், ஓரிரு வாரங்­க­ளுக்கு முன்னர் அந்த நிலைப்­பாட்டிலிருந்து பின்­வாங்கியிருக்­கிறார்.

ஆக, தேர்­த­லின்­போது கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எல்­லா­வற்­றையும் நிறை­வேற்­று­கின்ற அல்­லது உட­ன­டி­யாக நிறை­வேற்­று­கின்ற அல்­லது முழு­மை­யாக நிறை­வேற்­று­கின்ற நிலைப்­பாட்டில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவோ அவ­ரது அர­சாங்­கமோ இல்லை என்­பது தெளி­வா­கி­றது.
ஜெனீவா தீர்­மான விட­யத்தில், கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் தெளி­வான நிலைப்­பாட்டைத் தான் வெளிப்­ப­டுத்தி வந்­தது. ஆனாலும் அவ­ச­ரப்­பட்டு அதிலி­ருந்து விலகிக் கொள்­வது என்­பது சர்­வ­தேச அளவில் அர­சாங்­கத்தின் பெயரைக் கெடுத்து விடும். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்து, சர்வ­தேச நாடு­க­ளு­ட­னான உற­வு­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கி­டையில், முரண்பாடு­களில் சிக்கிக் கொள்­வதை விரும்­ப­வில்லை.

விரும்­பியோ விரும்­பா­மலோ ஆட்­சிக்கு வந்­த­வுடன் சுவிட்­ஸர்­லாந்­துடன் இரா­ஜ­தந்­திர முரண்­பா­டுகள் ஏற்­பட்டு விட்­டன. பிரித்­தா­னி­யா­வு­டனும், அமெ­ரிக்­கா­வு­டனும் முரண்­பா­டுகள் வெடிக்­கா­வி­டினும், சரி­யான புரிதல் ஏற்ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில், ஜெனீவா தீர்­மா­னத்தில் கையை வைக்கப் போனால், நிலை­மைகள் எவ்­வாறு செல்லும் என்ற அச்சம் அர­சாங்­கத்­துக்கு இருக்­கவே செய்யும்.

முன்­னைய அர­சாங்கம் ஆட்­சி­யி­லி­ருந்த போது, ஜெனீவா நெருக்­க­டியில் இருந்து தாங்­களே இலங்­கை­யையும், ராஜபக் ஷவி­ன­ரையும் காப்­பாற்­றி­ய­தாக பல­முறை கூறி­யி­ருக்­கி­றார்கள்.

மஹிந்த ராஜபக் ஷவை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு இழுத்துச் செல்­லப்­படாமல், மின்­சார நாற்­கா­லியில் இருந்து காப்­பாற்­றி­யது தாங்கள் தான் என்றும், அவர் 2015 தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருந்தால், இலங்கை மீது பொரு­ளா­தாரத் தடை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் என்றும், மைத்­திரி,- ரணில் அர­சாங்கம் பல­முறை கூறி­யி­ருந்­தது.

உண்­மையில், மின்­சார நாற்­கா­லிக்கு மஹிந்த ராஜபக் ஷ கொண்டு சென்­றி­ருப்பார் என்ற விட­யமும் சரி, இலங்­கைக்கு எதி­ரான பொரு­ளா­தாரத் தடை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் என்ற விட­யமும் சரி, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யினால் சாத்­தி­யப்­பட முடி­யாத விட­யங்கள் என்­பதே உண்மை.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் 2015இற்குப் பின்னர் நீடித்­தி­ருந்தால், பல்­வேறு சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கலாம் என்­பது உண்­மையே தவிர, பொரு­ளா­தாரத் தடை விதிக்­கப்­படும் அள­வுக்கு நிலை­மைகள் சென்­றி­ருக்­குமா என்­பது சந்­தேகம் தான்.

அது­போ­லவே, இப்­போது, ஆட்­சிக்கு வந்­த­ருக்கும் அர­சாங்­கத்­துக்கு ஐ.நா மனித உரி்­மைகள் பேர­வையில், கடு­மை­யான அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டுமா என்­ப­திலும் சந்­தே­கங்கள் உள்­ளன.
தற்­போ­தைய அர­சாங்கம் இன்­னமும், 30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்தில் என்ன முடிவை எடுக்கப் போகி­றது என்று தெரி­ய­வில்லை.

இந்த தீர்­மானம் நாட்டின் இறை­யாண்­மைக்கு எதி­ரா­னது. இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று கூறிக் கொண்­டி­ருந்­தாலும், ஜெனீ­வாவில் அளிக்கப் போகின்ற பதில் தான் இறு­தி­யா­ன­தாக இருக்கும்.
இந்த தீர்­மா­னத்தை ஆராய்ந்து கொண்­டி­ருக்­கிறோம், விரைவில் பதி­ல­ளிப்போம் என்று தான் அர­சாங்கம் இப்­போது கூறிக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு பல ஆண்­டு­க­ளாகி விட்­டன அதனை ஆராய்ந்து தான், அது இறை­யாண்­மைக்கு எதி­ரா­னது என்று அர­சாங்கம் கூறி­யது. இப்­போது மீண்டும் ஆரா­யப்­ப­டு­கி­றது என்றால், அதன் அர்த்தம், என்ன?,
இந்த தீர்­மா­னத்தை நிரா­க­ரித்தால், இதனை நிறை­வேற்ற முடி­யாது என்று முரண்டு பிடித்தால் சர்­வ­தேச சமூகம் என்ன செய்யும், அதன் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்று நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது தான் பிரச்சினை.

“இப்போது நிலைமைகள் மாறியிருக்கின்றன. புதிய அரசாங்கம், புதிய மக்கள் ஆணையுடன் பதவிக்கு வந்திருக்கிறது. புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு விளக்க வேண்டும்,” என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியிருக்கிறார்.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளதால், ஜெனீவா தொடர்பான முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறோம் என்று இலகுவாக அறிவித்து, அதிலிருந்து நழுவிக் கொள்ள முடியாது.

சர்வதேச உடன்பாடுகள், இணக்கப்பாடுகளில் இருந்து இலகுவாக விலகிக் கொள்ள முடியாது. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அதனை நினைவுபடுத்தியிருந்தார்.
அது ஜெனீவாவுக்கும் பொருந்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam