ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்!! (மருத்துவம்)
தூக்கமின்மை என்பது மறைமுகமான நோயாக, உலகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இக்குறைபாட்டை சமாளிக்க பல்வேறு நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தூக்கக் குறைபாட்டை சமாளிப்பதற்காகவே பிரத்யேக மருத்துவ முறைகள் எல்லாம் உருவாகி வருகின்றன. பல எண்ணற்ற ஆய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், வெந்நீர் குளியல் இதமான தூக்கத்துக்கு உதவும் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஒரு நல்ல நித்திரைக்கு முக்கியம் உடல் வெப்பநிலையை குளிர்விக்க குளிப்பதுதான். அதற்கு சரியான நேரம் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சுமார் 90 நிமிடங்கள்’ என்று கண்டறிந்துள்ளனர். Sleep medicine reviews இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 41 டிகிரி செல்சியஸ் பற்றி வெதுவெதுப்பான நீரில் படுக்கைக்கு செல்லும் 1 அல்லது 2 மணி நேரம் முன்பு குளிப்பது உங்கள் தூக்கத்தை கணிசமாக மேம்படுத்தும் என்பதை கண்டறிந்துள்ளனர்.
தூக்கம் மற்றும் அதற்கு காரணமான நமது உடலின் வெப்பநிலை இரண்டும் மூளையின் ஹைபோதலாமஸுக்குள் அமைந்துள்ள ஒரு சர்க்கார்டியன் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு சராசரி நபரின் சர்க்காடியன் கடிகாரத்தின் சுழற்சி வேகமானது, வழக்கமான தூக்க நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சுமார் 0.5 முதல் 1 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உடல் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
அதாவது, இரவு நேரத்தூக்கத்தின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதிக்கு இடையில் சர்கார்டியன் கடிகாரத்தின் சுழற்சியின் வேகம் மிகக்குறைந்த அளவிலும், விழிக்கும் தருவாயில் மெதுவாக அதன் வேகம் அதிகரிக்கத் தொடங்கும். அதிகமாகவும் இருக்கும். எனவே, தூங்கச் செல்வதற்கு 1 மணிநேரம் முன்பு சுடுநீர்க் குளியல் போடுவதன் மூலம் கை, கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியும். உடல் வெப்பம் குளிர்ந்தால், சர்காடியன் சுழற்சி வேகத்தை குறைத்து நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம் என்கிறது இந்த ஆய்வு.
Average Rating