இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் வந்ததால் ஏற்பட்ட உடல்நிலை மாற்றம் உடலில் இன்சுலின், பருமன் மற்றும் ஆண்மை குறைபாட்டை வலுவாக பாதித்து வருகிறது. ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இந்த பிரச்சனையை மருத்துவரிடம் நிறைய ஆண்கள் எடுத்து செல்வதில்லை. அப்படி சென்றாலும் கூட அவர்களுக்கு நிரந்தர தீர்வுக் கிடைப்பதில்லை. இதற்காக ஆண்மை அதிகரிக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்த பயன்தரும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளை பாலில் கலந்து இரவு வேளைகளில் உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஒரு கிராம் தாமரை விதையை ஒரு டம்ளர் பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும். வெண்டைக்காய் வேரை நன்கு இடித்து பொடியாக்கி, இரவு உணவருந்திய பிறகு பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும். கரும்பு சாறோடு கொஞ்சம் கற்கண்டும் சேர்த்து காய்ச்சி ஒரு ஸ்பூன் முருங்கை பூவை சேர்த்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். வெங்காயத்தை வதக்கி தேன் கொஞ்சம் கலந்து இரவில் சாப்பிட்ட பிறகு பசும்பால் பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
கொடிப்பசலைக் கீரை சாறில் பாதாம் பருப்பை ஊறவைத்து, அது உலறிய பிறகு பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் வீதம் கலந்து பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். அரச இலை கொழுந்தை அரைத்து சிறிதளவு சூடான பாலில் கலந்து காலை வேளையில் வெறும் பயிற்றில் ஓரிரு மாதங்கள் பருகி வந்தால் விந்து குறை நீங்கி, விந்து உற்பத்தி அதிகரிக்கும். உலர்த்திய செம்பருத்திப் பூ சூரணத்துடன் உலர்த்திய முருங்கைப்பூ பொடியும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating