சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு!! (மருத்துவம்)
சிறுநீரக பாதையில் ஏற்படும் நோயை ஹோமியோபதி சிகிச்சை மூலம் முற்றிலும் குணமாக்க முடியும். பிராஸ்டேட் விரிவாக்கம் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் நோயாகும். பிராஸ் டேட்டில் உள்ள திசுக்களும், அதன் சுரப்பியும் விரிவடைந்து சிறுநீர் குழாயின் பாதையை சுருக்குவதால் ஏற்படும் சிறுநீர் தொல்லைகளை‘பிராஸ்டேட்’ விரிவாக்கம் என்கிறோம்.
இந்த நோய் புற்று நோய் ஏற்படக்கூடிய வீக்கம், புற்று நோய் இல்லாமல் ஏற்படக்கூடிய வீக்கம் என இருவகைப்படும். இதற்கு ஹோமியோபதியில் நல்ல மருத்துவம் உள்ளது. இந்த நோய்க்கான அறிகுறிகள் வருமாறு : சிறுநீர் கசிவு அல்லது சொட்டுதல், சிறுநீர் கழித்தலை தொடங்குவதில் தயக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்க அடிக்கடி இரவில் எழுதல், சிறுநீர் பை முழுவதும் காலியாகாதது போன்ற உணர்வு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், இதில் ஏதாவது 3 அறிகுறிகள், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வதில் நல்லது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். மதுபானம், காபி, போதை பொருட்களைத் தவிர்க்க வேண்டும். வைட்டமின் பி6, வைட்டமின் இ, தாதுப்பொருட்கள் உள்ள கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் அதிகம் உண்பது நல்லது. உடல் எடையை குறைக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே ஹோமியோபதி மருந்து உட்கொண்டால் இந்நோய் முற்றிலும் குணமாகும்.
Average Rating