ஜனாதிபதி ஆட்சியில் நீடிக்க பதவி விலகிய பிரதமர்!! (உலக செய்தி)

Read Time:3 Minute, 42 Second

ரஷ்ய ஜனாதிபதி புதின் தனது ஆட்சிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசமைப்பில் சில மாற்றங்களை முன்மொழிந்த சிறிது நேரத்தில் அந்நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் பாராளுமன்றத்திற்கு மாற்றப்படும்.

2024 ஆம் ஆண்டு புதினின் நான்காவது பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த அரசியலமைப்பு மாற்றத்தால் புதின் வேறொரு புதிய பொறுப்பு ஏற்கலாம் அல்லது மறைமுகமாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

வருடாந்திர உரையில், புதின் தனது திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விளக்கி கூறினார். பிறகு எதிர்பாராதவிதமாக இந்த மாற்றங்களை முன்னெடுக்க பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் தனது அரசாங்கத்தை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளிவரும்வரை பிரதமர் பதவி விலகுவது குறித்து அமைச்சர்களுக்கு தெரியாது என ரஷ்ய அரசாங்க செய்தி வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு மாற்றுவது குறித்து நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக இரு பாராளுமன்ற அமர்வு உறுப்பினர்களின் முன்னிலையிலும் ஜனாதிபதி விளக்கி கூறினார்.

தற்போதைய நடைமுறைப்படி ஜனாதிபதி, பிரதமரை நியமிப்பார். அந்த முடிவை பாராளுமன்றத்தின் கீழவை உறுதி செய்யும்.

ஆனால் புதின் அறிவித்த மாற்றத்தின்படி பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்க, பாராளுமன்ற கீழவைக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் புதின் தெரிவித்தார்.

மாநில கவுன்சில் என்று அழைக்கப்படும் ஒரு ஆலோசனைக் குழுவிற்கு அதிக பொறுப்புகளை வழங்கவும் புதின் பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு குடியுரிமை அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து ரஷ்யாவில் வாழ அனுமதி பெற்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்யும் சட்டங்களை வலிமைப்படுத்துதல் உள்ளிட்ட சாராம்சங்களும் அரசியலமைப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களையும் ஜனாதிபதி வெளியிட்டார். 1990 களில் ரஷ்யாவின் மக்கள் தொகையில் வியக்கத்தக்க அளவு சரிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலியான உணவுகள்!! (வீடியோ)
Next post வரும் நிதியாண்டில் 1 கோடி வேலைகள் குறையும்? (உலக செய்தி)