பல்லு வலிக்குதா? (மருத்துவம்)

Read Time:3 Minute, 21 Second

இந்தியாவில் இரண்டில் ஒருவருக்கு பல் சொத்தை இருக்கிறது என்கிறது ஓர் அறிக்கை. பல் வலிக்கு வீட்டிலேயே செய்ய சாத்தியமான சில எளிய தீர்வுகள் உள்ளன. கிராம்பு மூலம் பல் வலியை எளிதில் குணப்படுத்த முடியும். இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி குணமாகும்.

ஒருவருக்கு நீண்ட நாட்களாக பல் வலி இருந்தால் இயற்கை பல்பொடியை தயாரித்து அதை உபயோகிப்பது நல்லது. எளிதாக இயற்கை பற்பொடியை தயாரிக்கும் முறை இதோ… வேலம்பட்டையை வெயிலில் நன்கு காயவைத்து அதில் ஒரு முப்பது கிராம் எடுத்துக்கொண்டு அதோடு மென்தால் மற்றும் ஆறு கிராம்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இதனை உரலில் அரைப்பதே சிறந்தது. நன்கு அரைத்தவுடன் அதை ஜெலித்தால் பற்பொடி தயார். இந்தப் பொடியை காலை மாலை என இரு வேலையும் பல் துலக்கினால் பல் வலி குணமாகும்.

சிலருக்கு பல்லில் உள்ள ஓட்டை காரணமாக பல் வலி ஏற்படும். அப்படி இருந்தால் அந்த இடத்தில் தேனை தடவி நிரப்ப வேண்டும். அதன் பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால் கிருமிகள் அழியும். ஆனால் இதற்காக நாம் உபயோகிக்கும் தேன் சுத்தமான தேனாக இருப்பது அவசியம். வேப்ப மரப்பட்டையோடு ஆறு கிராம்பு சேர்த்து நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கும் வரை கொதிக்க விட்டு, அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

குப்பை மேனி தழையில் இருந்து சாறு பிழிந்து அதை கொண்டு பனங்கிழங்கை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சிறிது நேரம் நன்கு காய்ச்ச வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய எண்ணெயை எங்கெல்லாம் பல் வலி உள்ளதோ அங்கெல்லாம் துளி துளியாய் விட்டு வர பல் வலி குறையும்.
கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும். கொய்யா இலையை காயவைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்க அதை கொண்டு பற்களை துலக்கினால் பல் வலி குறையும். இதையும் படிக்கலாமே: கண் சம்மந்தமான பிரச்சனைகள் நீங்க காய் வைத்தியம் மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பல் வலியில் இருந்து விடுபடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரீனாஸ் வென்யூ 600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post ஜெனரல் மோட்டார் டயட்.. கேள்விப்பட்டிருக்கீங்களா? (மருத்துவம்)