டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? (உலக செய்தி)

Read Time:1 Minute, 50 Second

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் 26 பேர் உயிரிழந்த நிலையில், 700 க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததால் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் 5 பேர் தாங்களாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

அதேபோல் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் கொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.

இதனிடையே டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, டிரம்புக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதா என கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை ஜனாதிபதி டிரம்புக்கு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், அவருக்கு அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும் டிரம்ப் வழக்கம் போல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேமராவில் பதிவான வினோதமான சம்பவங்கள்!! (வீடியோ)
Next post பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்!! (மகளிர் பக்கம்)