பழங்களின் மகிமைகளும், பலன்களும்!!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 1 Second

பொதுவாக ஞானப்பழம் என்று மாம்பழத்தைக் கூறுவர். ஆனால் அனைத்துப் பழங்களுமே உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஞானப்பழங்கள்தான்.

மாதுளம்பழம்: சளிக்கட்டு, இறுகிய மார்புச்சளி, சயநோய் இவற்றைப் போக்கும். உடலில் உள்ள விஷநீர் வெளியேறவும், வாதம், பித்தம் ஆகியவற்றை நீக்கவும் உதவும்.

வாழைப்பழம்: இவற்றை ‘‘அரம்பைக்கண்’’ என்று சொல்வதுண்டு. தேவலோகப் பெண்களைப் போன்ற அழகை உண்டாக்கும் என்பதால் இவ்வாறு சித்தர்கள் பெயரிட்டனர். ஆனால் வாத நோய்க்காரர்கள் இப்பழத்தை உண்ணக்கூடாது. அப்படியே ஆசை ஏற்பட்டால் உணவோடு சேர்த்து உண்டால் அதிகம் தொல்லை உண்டாகாது.

மாம்பழம்: நமைச்சல், மார்பு எரிச்சல், கண் நோய், கரப்பான் போன்றவற்றை உண்டாக்கக்கூடியது என்றாலும் விந்து அதிகரித்து ஆண்மை பலம் பெற இது உதவும்.

நாவல்பழம்: உடல்வலி, கடுப்பு இவை நீங்கும். தாகத்தை தணிக்கும். நீரிழிவு, வெப்பம் ஆகியவற்றை நீக்கும் குணம் இதில் உண்டு.

பாகற்பழம்: சாதாரணமாக இதைச் சாப்பிடுகிறவர்களுக்கு வாதம், பித்தம், கபம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களும், மேகம், சுரம், காசம், இளைப்பு, மூலம், வயிற்று கிருமி தொல்லை ஆகியவற்றை நீக்கும். வெறும் வயிற்றில் இப்பழத்தின் சாறு தினமும் அருந்தினால் நீரழிவு குணமாகும்.

பப்பாளிப்பழம்: சீழுடன் கூடிய ரத்த காயங்கள் ஆற பப்பாளிப்பழத்தை வெட்டி அதை அப்படியே ரணத்தின் மீது பூசி வந்தால் காயங்கள் ஆறும்.

தக்காளிப்பழம்: இரண்டு கப் தக்காளிச் சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். கண் பார்வை தெளிவடைய, கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்க உணவில் தினசரி நிறைய தக்காளி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பேரீச்சம்பழம்: பித்த நீர் சுரப்பியினால் ஏற்படும் தீங்குகள் நீங்கும். உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்புச் சத்துக்களை நீக்க உதவும். கபம் சம்பந்தமான நோய்கள், நீர்ப்பிடிப்பு, ரத்தகாசம், ருசியின்மை, வயிற்று சிக்கல் தீரும்.

– என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

அன்றாட உணவில் சோயா அவசியம்

* சோயா அதிகப் புரதச்சத்தும், குறைந்த கொழுப்புச்சத்தும் கொண்டுள்ளது.

* சோயா பொருட்களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

* எலும்புகளை பலப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது சோயா.

* ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

* சோயா, கெட்ட கொலஸ்ட்டிரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்டிரால் அளவைக் கூட்டுவதன் மூலம் மாரடைப்பைக் கட்டுப்படுத்துகிறது.

* சோயா உணவு மாதவிடாய் நின்றபின் உடலில் ஏற்படும் சங்கடங்களைக் குறைத்து எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது.

* இதில் இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.

* கண் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. குழந்தைகளுக்கு உணவாக சோயா கொடுத்து வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் உயரும்.

* பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.

* மூட்டுவலியைக் குறைத்து, சிறுநீரகக்கோளாறிலிருந்து பாதுகாக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்!! (வீடியோ)
Next post கோடைக்கான தலைமுடி பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)