தினமும் உடற்பயிற்சி வளரும் ஞாபகசக்தி!! (மகளிர் பக்கம்)
உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் பல்கலைகழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 வயது முதல் 80 வயது வரை உள்ள 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்கவேண்டும். அல்லது எளியவகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன.
இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போ கேம்பஸ்1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரியவந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!
Average Rating