26,033 பேர் பலி – நிலை குலைந்த அமெரிக்கா! (உலக செய்தி)

Read Time:2 Minute, 3 Second

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,981,239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 1,392,599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 478,425 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸூக்கு இதுவரை 126,596 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 609,240 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 26,945 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,033 ஆக அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி கற்பழித்து கொலை!! (உலக செய்தி)
Next post பாலின நோய்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)