கொரோனா வைரஸ் – மொட்டை அடித்துக் கொண்ட பொலிஸார்! (உலக செய்தி)

Read Time:1 Minute, 17 Second

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மட்டும் 544 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் பலியாகி உள்ளனர். வேகமாக நோய் பரவுவதால் பீதி அடைந்துள்ள இந்தூர் பொலிஸார் சிலர், தற்காப்பு நடவடிக்கையாக, தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, சாந்தன் நகர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலரும், 4 பொலிஸாரும் மொட்டை அடித்துள்ளதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். பொலிஸார் தெருக்களில் சீருடையில் மொட்டை தலையுடன் நடமாடி வருகின்றனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பொலிஸ்காரர், “தலைமுடியில் வைரஸ் எளிதாக ஒட்டிக்கொள்ளும். எனவே, மொட்டை அடித்தால், அதை தடுப்பதுடன், கிருமிநாசினியை நன்றாக தடவிக்கொள்ளலாம். வெயிலுக்கும் இதமாக இருக்கும்” என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபத்தான நிகழ்வுகள்!! (வீடியோ)
Next post வித்தியாசமான ஐடியாக்கள்!! (வீடியோ)