டெலிவரி பாய்க்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பங்கள்! (உலக செய்தி)
டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் பீசா டெலிவரி செய்யும் 19 வயது வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஏப்ரல் 14 ஆம் திகதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவருடன் டெலிவரி பாயாக வேலை செய்த சக வாலிபர்கள் 17 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வாலிபர், கடந்த 20 நாட்களாக டெலிவரி செய்த 72 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1500 க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating