ஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 33 Second

‘‘நீரிழிவு வந்துவிட்டது என்பதால் எல்லா உணவுகளையுமே தியாகம் செய்துவிட்டு கழிவிரக்கத்துடன் கட்டாயத்துக்காக எதையேனும் உண்ண வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. உணவுமுறையில் ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைத்தான் நீரிழிவு நமக்கு நினைவுபடுத்துகிறது. அதனால், முறையான ஆரோக்கியத்துக்கு உதவி செய்யும் பல சுவையான உணவுகளையும் நீரிழிவாளர்கள் உண்ண முடியும். குறிப்பாக நீரிழிவாளர்களுக்கான இனிப்பு உணவுகளும், அசைவ உணவுகளும் இருக்கின்றன’’ என்கிற உணவியல் நிபுணர் கோவர்தினி, இரண்டு ஸ்பெஷல் ரெசிபிகளையும் இங்கே விளக்குகிறார்.

‘‘நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் இனிப்புச்சுவை தேவையாகும். அவர்களுக்கு இனிப்பு எடுத்துக்கொள்ளும் அளவுகள்தான் மாறுபடுமே தவிர, அவர்களுக்கும் கட்டாயம் இனிப்புச்சுவை தேவை. நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக இனிப்பு உள்ள பலகாரத்தை குறைத்துக்கொண்டு இவர்களுக்கு வீட்டிலேயே இனிப்பு செய்து தந்தால் பாதுகாப்பானதாக இருக்கும். குறிப்பாக, பழங்களை பயன்படுத்தி இனிப்புகள் செய்து தரலாம். உதாரணத்துக்கு இதோ இப்படித்தான்…

அவியல் மீன் உணவு தயாரிப்பது எப்படி?

நீரிழிவாளர்கள் அசைவ உணவு எடுத்துக்கொள்ளும்போது கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக, மீன் வகை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதிலும் சிறிய வகை மீன்களில் சத்துகள் மிகுதியாக இருக்கிறது. பொதுவாகவே மீன்களில் நல்ல கொழுப்பு உள்ளது. இதய நோய் வராமல் காக்கும். ஓமேகா- 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது நம் சருமத்துக்கு மினுமினுப்பையும் எலும்புக்கு வலுவையும் தரும்.

முக்கியமாக, கடல் உணவுகளை எண்ணெயில் பொரிக்காமல் குழம்பாகவோ அல்லது வேகவைத்தோ உண்பது ஆரோக்கியமானது. சில வகை மீன்களை எண்ணெய் பயன்படுத்தாமலே வேகவைத்து சாப்பிடலாம். இதனால் மீனில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் நமக்கு முழுவதுமாக கிடைப்பதோடு அதீத கொழுப்புச்சத்து உடலில் சேராமலும் பார்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கெனவே அவியல் முறையில் மீனை சமைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 250 கிராம்
கொத்தமல்லித் தழை – 25 கிராம்
புதினா – 10 கிராம்
பூண்டு – 8 பல்
இஞ்சி – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
பச்சைமிளகாய் -5
எலுமிச்சைப் பழம் – அரை மூடி
வாழை இலை- 1

செய்முறை

மீனை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா உப்பு, 4 துளி எலுமிச்சை சாறு போன்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு ஒன்றாக மிக்ஸியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை மீனில் நன்கு தடவி வாழை இலையில் மூடி இட்லி தட்டில் வைத்து வேகவைத்தால் 20 நிமிடங்களில் சுவையான அவியல் மீன் தயார். வேகவைத்த மீனை வாழை இலையில் இருந்து எடுத்து அதன் மேல் கொஞ்சம் எலுமிச்சை சாறைப் பிழிந்து அதன் பிறகு சாப்பிடலாம்.

குறிப்பு: கொடுவாய், பாறை மீன், கிங்ஃபிஷ், பாம்பிரட், சுறா, எறா, வஞ்சிரம் மற்றும் முள், எலும்பு குறைவாக உள்ள மீன் மற்றும் சதை அதிகமாக உள்ள மீன்வகைகளை பயன்படுத்தி அவியல் மீன் தயாரிக்கலாம். அவியல் மீனின் பயன்கள் அவியல் மீனுக்கு எண்ணெய் நிறைய தேவைப்படாது. அதனால் நீரிழிவாளர்களுக்கு உகந்த உணவாக இருக்கிறது. இதயம் பாதுகாக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படாத வண்ணம் பாத்துக்கொள்கிறது. இது உடல் பருமன் வராமல் தடுக்கிறது. கண் நலன் காக்கும்.

கண் தொடர்பான பல பிரச்னைகளுக்கு மீன் உணவுகள் நல்லது. மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறுகளையும் தடுக்கிறது. மீனை வேகவைப்பதற்கு பயன்படுத்தும் வாழை இலையின்மூலம் ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைப்பதால் உணவு ஒவ்வாமையைத் தவிர்க்க முடியும். கெட்ட பாக்டீரியாவை கொல்லும் சக்தியும் இலையில் உள்ளது. மேலும் வாழை இலையில் வேகவைப்பதால் மீனின் ஊட்டச்சத்தும் அதன் சுவையும் கூடுதலாகும். வாழையிலைக்குப் பசியை தூண்டும் தன்மை உள்ளது. மேலும் நம்முடைய சருமத்தையும் பாதுகாக்கிறது.’’

ஃப்ரெஷ் ஃப்ரூட் அல்வா (Fresh fruit halwa)

தேவையான பொருட்கள்

பப்பாளி – ஒரு கப்
ஆப்பிள் – ஒரு கப்
ஆரஞ்சு – ஒரு கப்
ஆர்ட்டிஃபிஷியல் சுகர் – 50 கிராம்
முந்திரி – 7
பாதாம் – 8
ஏலக்காய் – ¼ டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு.

செய்முறை

முதலில் பப்பாளியைத் தோல் சீவி பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதனுள் இருக்கும் விதையை எடுத்துவிடவும். சிறிய துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்துவிட்டு பழ சுளையில் உள்ள மேல் தோலையும், கொட்டையையும் எடுத்துவிட்டு ஆரஞ்சு பழத்தை பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ளவும். ஆப்பி–்ளின் தோலை சீவி அதை சிறிய துண்டுகளாக வெட்டவும், இந்த மூன்று பழங்களையும் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அரைத்த பழக்கலவையை ஊற்றி நெய் விட்டு ஆர்ட்டிஃபிஷியல் சுகரைப் போட்டு நன்கு கிளறவும். மேலும் சிறிது நெய் விட்டு சுருள அல்வா பதம் வரும் வரை கிளறிக் கொண்டு இருக்கவும். அல்வா பதம் வந்தவுடன் தனி பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதை அல்வாவில் சேர்த்து ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் சுவையான ஃப்ரெஷ் ஃப்ரூட் அல்வா ரெடி.

(குறிப்பு : இந்த அல்வாவை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.) ஃப்ரூட் அல்வா செய்து தரலாம். அது எப்படி செய்வது என்கிறீர்களா?

ஃப்ரஷ் ஃப்ரூட் அல்வாவின் மருத்துவப் பயன்கள் :இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது கொழுப்பைக் குறைக்க உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இளமையாக வைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஃப்ரெஷ் ஃப்ரூட் அல்வாவினால் செரிமான மண்டலம் பாதுகாக்கப்படும். மலச்சிக்கல் நீங்கும். இந்த அல்வாவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம்.

நீரிழிவுக்காரர்களுக்கு உகந்த உணவாகவும் இருக்கிறது. இதில் இனிப்புக்காக Artificial sweeteners கலந்திருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதில் அதிகம் கலோரிகள் இல்லை என்பதே இதற்கு காரணம். முக்கியமாக ஆர்ட்டிஃபிஷியல் சுகர் வாங்கும்போது அது தரமானதாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறுவேளை சாப்பிடுங்கள்…காபி, பால் பருகுங்கள் ! நீரிழிவைக் கட்டுப்படுத்த சூப்பர் பிளான்!! (மருத்துவம்)
Next post அளவுக்கு மீறினால்..? (அவ்வப்போது கிளாமர்)