உணவு கட்டுப்பாட்டால் ரத்த கொதிப்பை தடுக்கலாம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 51 Second

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன் மொழிக்கேற்ப ஆரோக்கிய வாழ்வு கிடைப்பது எல்லோரது வாழ்விலும் எளிதாக அமைந்துவிடாது. அவரவர் உணவு பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. பெரும்பாலோர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். நீரழிவு நோய் என்பது நோய் அல்ல, ஒரு விதமான குறைபாடு. ஆனால் அதை அலட்சியப்படுத்தினால் அதைவிட ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய் எதுவும் இல்லை. உடலில் உள்ள கனையத்திலிருந்து இன்சுலின் தேவையாள அளவு உற்பத்தி ஆகாததாலும் சரியாக செயல்படாமல் இருந்தாலும் நீரழிவு நோய் ஏற்படலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், பசி, எடை குறைதல், சோர்வு, பார்வை மங்குதல், பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல் போன்றவை நீரழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். பரம்பரையில் நீரழிவு நோய் உள்ளவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே மருத்துவரை அணுகி நீரழிவு நோய்க்கு சிகிச்சைகள் செய்து கொண்டு அச்சமின்றி வாழலாம். நீரழிவு நோயின் பாதிப்பு காரணமாக மாரடைப்பு, பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு, பக்கவாதம், கோமா மற்றும் இறப்பு நேரிடும்.

நம்முடைய இதயத்திலிருந்து உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த குழாய்கள் மூலம் ரத்தம் எடுத்து செல்லப்படுகிறது. ரத்தக்குழாய்கள் தன்னுடைய இயல்பு தன்மையை இழக்கும்போது ரத்த குழாய்கள் தடிக்கும். ரத்த கொதிப்பு அதிகமாகிறது. இதற்கு உயர் ரத்த அழுத்தம் என்கிறோம். இவ்வித ரத்த அழுத்தத்துக்கு எந்தவிதமாக அறிகுறியும் கிடையாது. அதிகமாகும்போது சிலருக்கு லேசான மயக்கம், தலைவலி, தலைச்சுற்றல், மூக்கிலிருந்து ரத்தம் வருதல் போன்றவை உண்டாகின்றன. மேலும் ஒரு சிலருக்கு மாரடைப்பு, மூளையில் ரத்த குழாய் அடைப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. எவ்வித காரணமும் இன்றி ரத்த கொதிப்பு அதிகமாகிறது.

உடலில் உள்ள உறுப்புகள் சிறுநீரகம், தைராய்டு, அட்ரினல் சுரப்பி பாதிப்பாலும், மாத்திரைகள் (குடும்ப கட்டுப்பாடு) ரத்தக்குழாய் பாதிப்பு (பிறவியிலேயே) களினாலும் ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, பார்வை இழப்பு, கை கால்களில் ரத்த ஓட்ட பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க உணவில் உப்பை குறைத்தல், புகையிலை, மதுபானங்களை தடுத்தல், எண்ணெய் வகைகளை குறைத்தல், உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்ளுதல் மூலம் ரத்த கொதிப்பு மற்றும் மாரடைப்பை தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.

பெண்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்

பெண்களுக்கு வரும் புற்றுநோயில் மார்பக புற்றுநோய் முதல் இடத்தையும், கர்ப்பபை வாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. புற்றுநோய் என்றாலே எந்தவித அறிகுறியும் இல்லாமல் சீக்கிரம் ஆயுளை குறைத்துவிடும். கர்ப்பபை வாயானது பெண்ணின் வெளி உறுப்பில் இருந்த 7 செ.மீட்டர் உள்ளே இருப்பதால் அதில் ஏற்படும் புண் மற்றும் புற்றுநோய் கண்டறிய முடியாது. பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலை கண்டறிந்து சிகிச்சை மூலம் பூரணகுணமடையலாம்.

21 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும், 30 வயதுக்கு பிறகு மூன்று வருடத்துக்கு முறையும் ஒரு முறையும் கர்ப்பபை வாய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோயை தடுக்க தடுப்பூசிகள் உள்ளது. புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் கண்டறிய பரிசோதனை எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக்கல்லூரி வரை தினமும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆகவே நாம் விழிப்புடன் இருந்து புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது வேறலெவல் வெற்றியால இருக்கு ! (வீடியோ)
Next post மிரளவைக்கும் வெறித்தனமான எதிர்கால உணவுகள்!! (வீடியோ)