படுக்கையில் பெண்களின் எதிர்பார்ப்புகள்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 38 Second

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. உநவின் போது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்…

மனைவி தான் இருந்தாலும்..அனுமதி அவசியம்

தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் உறவிற்கு தயாராகும் முன் துணைவன் தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்த மழையில் நனைக்கலாமா நீ தயாரா என்று சில கேள்விகளை கேட்டு வையுங்கள்…

படுக்கையில் மெல்லிசை

படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மெல்லிசையை கசியவிட்டால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம்.

ஓகே ஆன பின் செல்லப் பெயர்

உங்கள் பெண் துணை உறவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய பின் படுக்கையறையில் உடனே விளையாட்டுக்களை துவக்கி விடாதீர்கள். துணைக்கு முதலில் நல்ல கிளுகிளுப்பான செல்லப் பெயர் வைத்து கூப்பிடுங்கள். அநேக பெண்கள் ஆண்களின் இந்த செல்ல பெயரை படுக்கை அறையில் நிச்சம் எதிர்பார்க்கிறார்கள். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சி துணையின் உடல் வாகுக்கு ஏற்ப நல்ல அம்சமான செல்லப் பெயரை சூட்டுங்கள் அவருக்கு. பின்னர் அவர்களது உடலை வருடவேண்டும், கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருட வேண்டுமென்று எதிர்பார்கிறார்கள்.

இறுதியும் தொடக்கம் போல்…

முத்தம் என்பது உறவு என்னும் பூட்டை திறக்கும் சாவி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நெற்றியில் ஆரம்பிக்கும் முத்த மழையானது கண்கள், கண்ணம், முகவாய், உதடு என அனைத்து பகுதிகளையும் நனைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். துவக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பெண்களை திருப்தியடையச் செய்யுங்க

ஆண்களின் ஆசை சில நிமிட நேரங்களில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்களுக்கு நிச்சயம் அப்படி இல்லை. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சில நிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாகவே இருக்கும். எனவே பெண்களின் இச்சை அடங்கும் வரை அவர்களுக்கு தேவையான காம விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடிதான் ஆக வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு!! (மகளிர் பக்கம்)
Next post காய் கனி இருக்க கலோரி கவர்ந்தற்று!! (மருத்துவம்)