கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ஸ்டெம் செல் சிகிச்சை முறை !! (உலக செய்தி)

Read Time:3 Minute, 25 Second

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலில் நேற்று வரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 13 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2 ஆயிரத்து 543 பேர் குணமடைந்துள்ளனர்.

பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் மூலம் ‘கொரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் புதிதாக மனித உடலில் உள்ள ‘ஸ்டெம் செல்’களை பிரித்து எடுத்து அதன் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது அபுதாபி ‘ஸ்டெம் செல்’ மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து ‘ஸ்டெம் செல்’கள் பிரித்து எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்படுகிறது.

தொடர்ந்து அந்த செல்கள் ‘கொரோனா’ நோய் எதிர்ப்பு மருந்துபோன்று தயார் செய்யப்படுகிறது. பின்னர் அவை புகையை போன்று நுண் திவலையாக மாற்றப்பட்டு யாரிடம் இருந்து ‘ஸ்டெம் செல்’ எடுக்கப்பட்டதோ, அந்த நோயாளியை நுகர வைக்க வேண்டும்.

அப்போது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ‘ஸ்டெம் செல்’கள் நோயாளியின் நுரையீரலுக்குள் நுழைந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட செல்களின் மீது படிந்து அவற்றை சரிபடுத்துகிறது. இதுபோல தொடர்ந்து செய்யும் பட்சத்தில் ‘கொரோனா’ பாதிக்கப்பட்ட நபரை முற்றிலும் குணப்படுத்த முடியும் என அபுதாபியில் உள்ள ‘ஸ்டெம் செல்’ ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘இதுவரை 73 ‘கொரோனா’ நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட ‘ஸ்டெம் செல்’கள் நோய் எதிர்ப்பு மருந்தாக மாற்றப்பட்டு அவர்களுக்கே மீண்டும் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 73 பேரும் பூரணமாக குணமடைந்துள்ளனர். எனவே இந்த புதிய சிகிச்சை முறை வெற்றியடைந்துள்ளது. இந்த சிகிச்சை முறைக்கு பொருளாதாரத்துறை காப்புறுதி அளித்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் அமீரகம் முழுவதும் ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை முறை அமல்படுத்தப்பட உள்ளது’’ என குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே நாளில் 36 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா!! (உலக செய்தி)
Next post வாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் ! (வீடியோ)