தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 24 Second

வீட்டில் அதிக நேரம் நாம் அமர்ந்து பேச, படிக்க, சாப்பிட, விருந்தினர் வந்தால் உபசரிக்க என நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகள் எப்போதுமே சிறப்பானவை. ஏன் அரசன் முதல் ஆண்டி வரை இந்த நாற்காலிகள் நம் வாழ்வில் எப்போதும் ஒரு பெரிய இடம் வகிக்கும். அப்படிப்பட்ட நாற்காலிகளுக்கு எப்போதும் போல் ஏதோ ஒரு தேர்வாக இல்லாமல் கொஞ்சம் சிறப்பாக தேர்வு செய்து காண்போரை வியப்பில் ஆழ்த்தலாமே. நாற்காலியின் முக்கியத்துவம் கருதியே சுப்ரீம் ஃபர்னிச்சர் நிறைய வகையான நவீன யுகத்திற்கேற்ப காம்பேக்ட் ஆக பொருந்தக்கூடிய நாற்காலிகளை அறிமுகம் செய்திருக்கிறது.ஏகப்பட்ட வகைகள் அதில் சில வகை மட்டும் இங்கே…

லவ் சீட் சோபா வித் சென்டர் டேபிள்

எப்போதுமான மூன்று பேர் அமரும் சோபாவிற்கு பதில் இரண்டு பேர் அமரும் சோபா சீட், அதனுடன் கேம்பிரிட்ஜ் வகை நாற்காலிகள் மற்றும் வேகாஸ் வகை நடு டேபிள். சுலபமாக எங்கும் பயன்படுத்தக்கூடிய வகையான இந்த சேர்கள் வெளிப்புற தோட்டம், ஹால், பால்கனி, படுக்கை அறை என எங்கும் அழகான தோற்றம் கொடுக்கும் வகையைச் சேர்ந்தவை.

டைனிங் செட் நாற்காலிகள்

படிக்க, சாப்பிட, டேபிளில் அமர்ந்து எழுத என இதனை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்டவைதான் இந்த கைப்பிடி இல்லா நாற்காலிகள். இதில் ஏகப்பட்ட கலர்கள் மற்றும் டிசைன்கள் என கண்களைக் கவர்கின்றன. மேலும் மேட்சிங்கான டேபிள்களுமாக இணைந்து டைனிங் டேபிள், காபி டேபிள் என நாமே மேட்ச் செய்து பயன்படுத்தலாம். இந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘ஓக்’ ரக நாற்காலிகள் அதீத கனம் தாங்கும் வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வகையில் ‘டிரீம்’ என்னும் தீம் விற்பனையில் டாப் வகையறாக்களாக உள்ளது.

புளோ மோல்டட் ரேஞ்ச்

இந்தியாவிலேயே முதன்முறையாக நீடித்த பலவகைப் பயன்பாடுகள் உள்ள மேலும் சுலபமாக மடக்கக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டேபிள் வகை. பார்ட்டிகள், கேம்ப், கேட்டரிங் என எந்த வகைக்கும் இந்த டேபிள்களை பயன்படுத்தலாம். மேலும் இடத்தை அதிகம் பிடிக்காத வகையில் மடித்து மிகச்சிறிய இடத்தில் வைத்து விடலாம். இதில் கிளாஸ், ஸ்விஸ், அமேஸ், டிஸ்க் என பல வகைகள் உள்ளன.

சென்டர் டேபிள் மற்றும் டிராலிஸ்

தோட்டம், நீச்சல் குளம் அருகில், பால்கனி, வீட்டு முற்றம், வரவேற்பறை, காபி, உணவருந்த, சிற்றுண்டி என அனைத்து வகையான தேவைகளுக்கும் இந்த சென்டர் டேபிள் பயன்படுத்தலாம். ஏகப்பட்ட வகைகள் அதில் புதிதான ‘வேகாஸ்’ வகை கிளாஸ் டாப் வகையாக கிளாஸ் லுக் கொடுக்கும் டேபிள்கள். மேலும் அதீத கனம் தாங்கும் வகையறாக்களான இந்த சென்டர் டேபிள்களில் ஹைட்ரா, பீட்டா, ஆஸ்ட்ரா, மேக்னா, டெல்டா, ஆல்பா என பல வகைகள் உள்ளன. சில டேபிள்கள் நாற்காலிகளுடன் மேட்சிங்காக டைனிங் வகையறாக்களாகவும்
கிடைக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேரன்டல் கன்ட்ரோல் ஆப்!! (மகளிர் பக்கம்)
Next post இது வேறலெவல் வெற்றியால இருக்கு ! வெறித்தனமாக வெற்றியடைந்த முட்டாள்தனமான கண்டுபிடிப்புகள்!! (வீடியோ)