வீட்டைச் சுற்றி மூலிகை வனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 35 Second

சின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், சிறுநீரகப் பழுது, புற்றுநோய், இதய நோய் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றையெல்லாம் குணப்படுத்த எத்தனையோ ஆயிரங்களை செலவு செய்கிறோம். ஆனால் இந்த வியாதிகளை குணப்படுத்த நம் நாட்டு மூலிகைகளே போதும் என்கிறார் சென்னை மாடம்பாக்கத்தில் மூலிகை பண்ணை வைத்து நடத்தும் கண்ணகி ராஜகோபால். அவரது மூலிகைப் பண்ணையில் அவரை சந்தித்தோம்.

‘‘நம் வீட்டைச் சுற்றி எத்தனையோ மூலிகைகள் செடி, கொடி, மரமாக கிடக்கிறது. ஆனால் அதை என்னவென்று தெரியாமல், மதிக்காமல், அதைப் பயன்படுத்துவதில்லை. உலகத்திலேயே எல்லா மூலிகைகளும் கிடைப்பது தமிழ் நாட்டில்தான். இது பல சித்தர்கள் வாழ்ந்த பூமி. அவர்கள் எத்தனையோ மூலிகை பொக்கிஷங்களை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றுள்ளனர். நாம்தான் மறந்து விட்டோம்.

எனக்கு இதில் ஆர்வம் வர காரணம், எனக்கு உடலில் ஏற்பட்ட சில பிரச்னைகளுக்கு சிகிச்சையாக மூலிகை மருந்துகளை சாப்பிட்ட பின்னர்தான் பல நாள் கஷ்டம் ஒரேநாளில் தீர்ந்தது. இதை முதலில் நம்பவேண்டும். அதன்பிறகு தேடித்தேடி மூலிகைகள் பற்றி தெரிந்துகொண்டேன்.

காடுகள், மலைகள் எல்லாம் அலைந்து திரிந்து தேடிப்பிடித்தேன். இப்போது என்னிடம் நூற்றுக்கணக்கான மூலிகைகள் உள்ளன. வீட்டிலேயே பண்ணை அமைத்து விற்பனையும் செய்து வருகிறேன்’’ என்றவர், தன்னிடம் உள்ள மூலிகை மற்றும் அதன் சிறப்புப் பண்புகள் பற்றி கூறினார்.

இந்த மூலிகைகளை தேடி நீங்கள் காடுகரை என அலைய வேண்டாம். இவை எல்லாமே நம் வீட்டைச்சுற்றி வளர்ந்து நிற்கும் தாவரங்கள்தான். ஆனால், நமக்குதான் எதையும் தெரியவில்லை.

ஏனெனில், நம் முன்னோர்கள் அவற்றை நமக்கு அடையாளப்படுத்தாமலே இருந்துவிட்டனர். ஒருசிலவற்றை நமக்கு அடையாளப்படுத்தியும் நாகரிக வளர்ச்சியில் நாம் அதை உதாசீனப்படுத்திவிட்டோம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல், காடு, விவசாய பூமி என அனைத்தையும் அழித்துவிட்ட நிலையில் இன்று அதன் அருமை தெரிய வருகிறது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. இந்த மூலிகை இந்த நோய்க்கு பயன்படும் என்பது தெரிந்துகொண்டாலே நம் கண்முன் நம் உயிர்காக்கும் மூலிகைகளை அழியாமல் பாதுகாக்கலாம்’’ என்றவர், இந்த மூலிகைகளைக் கொண்டு தயாரித்துவரும் பொருட்கள் பற்றியும் கூறினார். ‘‘மூலிகைகளைக்கொண்டு நிறைய பொருட்களை தயாரித்து வருகிறேன்.

மூலிகை மூட்டுவலி தைலம், மூலிகை பல்பொடி, மூலிகை பேன்மருந்து, மூலிகைபேஸ்பேக், கோபுரம்தாங்கி கூந்தல் தைலம். இவை மட்டுமல்லாமல் பல அரியவகை மரங்களையும் வளர்த்து வருகிறேன். புன்னை, ருத்ராட்சம், திருவோடு, மனோரஞ்சிதம், கடம்பம், மருதம், பாதிரி, முள்ளுசீத்தா, பன்னீர் மரம், வெப்பாலை.இவற்றை வளர்ப்பது எளிது’’ என்கிறார்.

* தழுதாழை – இது 84 விதமான வாதத்தை குணப்படுத்தும்.

* கரிசலாங்கண்ணி – கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும்.

* வல்லாரை-மூளையை பலப்படுத்தும்.

* பூனைமீசை- சிறுநீரகத்தை பலப்படுத்தும்.

* கரு ஊமத்தை-நாய்க்கடிக்கு நல்ல மருந்து.

* நிலவேம்பு-விஷக் காய்ச்சலை
குணப்படுத்தும்.

* தொட்டால் சுருங்கி-சர்க்கரை நோயை
கட்டுப்படுத்தும்.

* ஆடுதீண்டாபாளை-பாம்புக் கடியை
குணப்படுத்தும்.

* யானைநெருஞ்சில்- உடல் உட்பகுதியில் உள்ள சூட்டை தணிக்கும்.

* சிவனார் வேம்பு- சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை குணமாக்கும்.

* அருவதாம்பச்சை-மாந்தத்தை தடுக்கும், பாம்புகள் வராது.

* சிருகன்பீளை-சிறுநீரக கற்களை
கரைக்கும்.

* தூதுவளை- சளியை கரைக்கும்.

* வசம்பு- நோய்க்கிருமிகளை அழிக்கும்.

* ஓரிதழ் தாமரை-ஆண்மையை பெருக்கும். கட்டிகளை கரைக்கும்.

* நீர்பிரம்மி-ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சித்தாமுட்டி – மூட்டுவலியை குணப்படுத்தும்.

* பேய்விரட்டி-விஷப்பூச்சிகளை விரட்டும்.

* ஆடாதோடா- இருமலை தடுக்கும்.

* நித்தியகல்யாணி-புற்றுநோய் வராமல் தடுக்கும்.

* நத்தைசூரி- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* விஷ்ணு கிரந்தி-காய்ச்சலை தணிக்கும்.

* கோபுரம்தாங்கி-புழுவெட்டை தடுக்கும்.

* நேத்திர மூலி-கண் நோய்க்கு மருந்து.

* கள்ளிமுளையான்-பசியை உண்டாக்கும்.

* சர்ப்பகந்தா-மனநோய்க்கு நல்ல மருந்து.

* சித்திரமூலம்-வலியை போக்கும்.

* பொடுதலை-இதயத்தை பாதுகாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!! (உலக செய்தி)