38 கோடி ரூபா போதைப்பொருள் கடத்திய நபர் கைது!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 59 Second

கனடாவிலிருந்து 38.10 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றதாக இந்திய லொரி ஓட்டுநரை அமெரிக்க பொலிஸார் கைது செய்தனா்.

கனடாவின் ஒன்டரியோவில் இருந்து அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லொரியை குா்பிரீத் சிங் (30) என்ற இந்தியா் ஓட்டிச் சென்றாா். நயாகரா வீழ்ச்சியை கடந்து அமெரிக்காவின் அமைதி பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த லாரியை பொலிஸாா் சோதனையிட்டனா்.

சரக்கு லொரியில் 58 பெரிய அட்டைப் பெட்டிகளில் இந்த போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்து குா்பிரீத் சிங்கை கைது செய்தனா். லொரியில் இருந்து 3,346 பவுண்டு எடையுள்ள 38.10 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜா்படுத்தினா்.

அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த பொலிஸாா் அனுமதி கோரிய நிலையில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த வாரத்தில், போதைப்பொருள் கடத்த முயன்தாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இரண்டாவது இந்தியா் குா்பிரீத் சிங் ஆவாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தம் பற்றி ஒரு ஆய்வு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நளினி, முருகன் சந்திக்க அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனு !! (உலக செய்தி)