சுசாந்த் சிங்கின் ரசிகை தூக்கிட்டுத் தற்கொலை! !! (சினிமா செய்தி)

Read Time:3 Minute, 18 Second

கடந்த ஞாயிறன்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங். அவருடைய இழப்பைத் தாங்க முடியாமல் சுசாந்த் சிங்கின் ரசிகை ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் காய் போ சே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா்.

அதன் பிறகு, சுத் தேசி ரொமான்ஸ், ராப்டா, கேதா்நாத், சொன்சிரியா உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் இழப்பைத் தாங்க முடியாமல் அவருடைய ரசிகை ஒருவர் விசாகப்பட்டினத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்த வந்த 21 வயது ஆசிரியை ஒருவர், சுசாந்த் மறைவுக்குப் பிறகு மிகவு மனம் உடைந்துள்ளார். சுசாந்த் தொடர்பான விடியோக்களைத் தொடர்ந்து பார்த்தவருக்குத் துக்கம் அதிகமாகியுள்ளது. இதையடுத்து தனது வீட்டில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி காவல்துறை அதிகாரி கூறியதாவது: சுசாந்தின் விடியோக்களைப் பார்த்து மிகவும் வேதனையில் இருந்துள்ளார். எல்லோரும் வீட்டில் இருந்தபோது தனது படுக்கையறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் இந்திய காய்கறி கடைகள்!! (வீடியோ)
Next post மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?! (அவ்வப்போது கிளாமர்)