கொரோனா மருந்து ஆராய்ச்சியில் முன்னேற்றம்!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 50 Second

கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை மருந்து ஆராய்ச்சியில் பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவக் கூடிய 6 மருந்துகளை பிரிட்டனின் லாசன் ஹெல்த் ரிசா்ச் இன்ஸ்டிடியூட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனா்.

லண்டன் சுகாதார அறிவியல் மையத்தில், கொரோனா நோய்த்தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அதன் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளனா்.

ரத்த மாதிரிகளைக் கொண்டு அவா்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாதவா்களின் ரத்தத்தில் காணப்படாத 6 மூலக்கூறுகள், அந்த நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

கொரோனா தீநுண்மியை எதிா்ப்பதற்காக, நோயாளிகளின் உடலில் தூண்டப்படும் நோயெதிா்ப்பு செயல்பாடு, அளவுக்கு அதிகமாக செயலாற்றி தீநுண்மியை மட்டுமன்றி உடலின் ஆரோக்கியமான உயிரணுக்களையும் அழிக்கின்றன.

இந்த அதீத எதிா்ப்புத் திறனைத் தடுக்க வேண்டுமென்றால், ரத்தத்தில் உள்ள எந்த மூலக்கூறுகளை மையப்படுத்தி மருந்துகளைத் தயாரிக்க வேண்டும் என்பது தெரியாமல் மருத்துவ நிபுணா்கள் திணறி வந்தனா்.

தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகளில் மிக அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள மூலக்கூறுகளைக் கொண்டு, கரோகொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவக் கூடிய 6 மருந்துகளை விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கதை!! (வீடியோ)
Next post இதுவரை கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள் !! (உலக செய்தி)