கெட் செட் குக் !! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 44 Second

நடிகை, பிசினஸ்வுமன், ஊடக கலைஞர், பாடகர், கலைக் குடும்பத்தின் வாரிசு… இப்படி பல முகங்கள் இவருக்கு உண்டு. அதில் மற்றொரு முகம் தான் சமையல் கலைஞர். டிஜிட்டல் துறையில் முதல் முறையாக சமையல் நிகழ்ச்சி மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். ‘‘நான் வந்து சாப்பாட்டுப் பிரியை. நிறைய பேர் என்கிட்ட கேட்பாங்க. ஏன் இவ்வளவு உடற்பயிற்சி செய்றேன்னு. அதற்கு நான் சொல்லும் ஒரே பதில் சாப்பிடத்தான்’’ என்று தன் டிரேட் மார்க் சிரிப்புடன் பேசத் துவங்கினார் பலமுக நாயகி அனுஹாசன்.

‘‘சாப்பாட்டுக்கும் எனக்குமான உறவு ரொம்பவே பலமானது. அதுமட்டுமில்லை சாப்பாடு சம்பந்தமா பேசணும்னா நிறைய சந்தோஷமான நினைவுகள் அதில் அடங்கி இருக்கும். எனக்கு சாப்பாட்டுக்கு மேல ஒரு நிரந்தர காதல் உண்டு. அப்ப எனக்கு எட்டு வயசு இருக்கும். நான் முதல் முறையா அப்பதான் சமைக்க கத்துக்கிட்டேன். அந்த காட்சி இன்னமுமே என் கண்முன்னால இருக்கு. திருச்சியில் எங்க வீட்டு கொல்லைபுரத்தில் செங்கலை அடுக்கி, விறகு அடுப்பில் ஒரு வெண்கலப்பாத்திரத்தில் தான் நான் அந்த புலாவ் சமைச்சேன். அந்த விறகு அடுப்பு வாசனை இன்றுமே என் மனதில் பசுமையா இருக்கு. அப்பா ஆரம்பிச்சது இன்று சமையல் மேல் எனக்கு ஒரு தனி பிரியம் ஏற்படுத்தி இருக்கு. என்னோட அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அதுவும் புதுசு புதுசா செய்து தருவாங்க.

அம்மா சமையலை தாண்டி எனக்கும் அம்மாவுக்கும் டைனிங் டேபிள் மற்றும் சமையல் அறையில் நிறைய சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கு. எனக்கு இப்ப கூட ஞாபகம் இருக்கு. அம்மா பொங்கல் செய்யும் போது, முந்திரிப்பருப்பை வறுத்து வைப்பாங்க. அவங்க அப்படி திரும்பும் போது நானும் அண்ணனும் அந்த முந்திரிப்பருப்பை பதம் பார்த்திடுவோம். எப்போதும் வறுத்த முந்திரியை பார்த்தாலும், எனக்கு அந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும். அது மாதிரி சின்னச் சின்ன நினைவுகள் நிறையவே இருக்கு. அதனாலேயே சாப்பாடு எனக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒன்று’’ என்றவர் டிஜிட்டல் துறைக்கு வந்த காரணம் பற்றி விவரித்தார்.

‘‘நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு சமையல் மேல் இருந்த ஈடுபாட்டால்தான் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன் பிறகு ஸ்மூதீஸ் என்ற ஜூஸ் கடை ஆரம்பிச்சேன். இப்ப எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. எனக்கு டிஜிட்டல் புதுசு. அதனால் அதிலும் ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்டேன். அந்த சமயத்தில் தான் ஜே.எஃப்.டபிள்யு குழு ஒரு சமையல் நிகழ்ச்சி செய்யலாம்னு சொன்னாங்க. நமக்கு தான் சாப்பாடு ரொம்ப பிடிக்குமே. மறுப்பு எதுமே சொல்லாம ஓ.கே சொல்லிட்டேன்.

சிலருக்கு சமையல் ஒரு கலை. ஒரு சிலருக்கு அது அறிவியல். யார் எப்படி வேண்டும்னாலும் பார்க்கட்டும். என்னைப் பொறுத்தவரை சந்தோஷமா சமைக்கணும் அவ்வளவு தான். அப்படி செய்யும் போது, அந்த சாப்பாட்டின் சுவையே மாறுபடும். ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் சொல்வாங்க. ஒரு ரெசிபி செய்யும் போது எல்லா பொருட்களையும் சேர்த்த பிறகு கடைசியா ஒரு முக்கியமான பொருளை சேர்க்க செல்வாங்க. அது தான் அன்பு. அன்பானவர்களுக்கு ஆசையா சமைக்கும் போது அந்த காதல் உணவின் சுவையில் வெளிப்படும். அது நமக்குள்ளே ஒரு சந்தோஷத்தை கொண்டு வரும் என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க ஆசைப்பட்டேன்.

சமையல் கஷ்டமானது கிடையாது. இரண்டு மணி நேரம் எல்லாம் சமைக் காமல், டக்குன்னு ஜாலியா, சிம்பிளா சமைக்க கூடிய உணவுகள் இருக்கு. அதை மக்களுக்கு கொடுக்க விரும்பி னேன். இனி யாரும் சமைக்க பயப்படாம என்னுடன் சேர்ந்து சமைக்கலாம். மேலும் ஒவ்வொரு எபிசோட் போது, எனக்கும் சமையலுக்கும் சம்மந்தமான சுவாரஸ்யமான நிகழ்வுகள் அப்புறம் பயனுள்ள குறிப்புகள் எல்லாம் இதில் சொல்லி இருக்கேன்’’ என்றவர் தன்னுடைய மலரும் நினைவினை பகிர்ந்து கொண்டார்.

‘‘இப்போதைக்கு மொத்தம் 12 ரெசிபிக்களை செஃப் ராம் அவர்களின் ஆலோசனையில் வெளியிட்டு இருக்கோம். மக்களின் ஃபீட்பேக் பார்த்து அதில் மாற்றம் செய்யணும்னா பார்த்து செய்யும் எண்ணம் இருக்கு. சமையல் பொறுத்தவரை நான் தமிழ்நாடு மட்டும் இல்லை… அமெரிக்கன், மெக்சிக்கன், வட இந்தியா என எல்லா உணவுகளும் சமைப்பேன். சைவமும் அசைவமும் சமைப்பேன். இது க்விக் சமையல் என்பதால், அம்மாக்கள் அதை எளிதா எப்படி செய்யலாம்னு டிப்ஸ் தருகிறேன். வீட்டில் மூணு குழந்தைங்க இருக்காங்கன்னா, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஃபிளேவர் மில்க்‌ஷேக் பிடிக்கும். அதை தனித்தனியா செய்யாம, மில்க் ஷேக்கின் பேஸ் பொருளை தயார் செய்திட்டு, அதன் பிறகு விரும்பிய ஃபிளேவரை செய்து தரலாம். மில்க்‌ ஷேக்னு சொன்னதும் என் அம்மா பக்கத்துவீட்டு குழந்தையை எப்படி பால் குடிக்க வச்சாங்கன்னு தான் நினைவுக்கு வருது. அந்த குழந்தை பால் சாப்பிட அடம் பிடிப்பா.

அம்மா உடனே பாலில் ேராஸ் மில்க் கலந்து இதை குடிச்சா, நீ பிங்கா பிங்கா ஆயீடுவேன்னு ெசான்னாங்க. அவ்வளவு தான் அதன் பிறகு அந்த குழந்தை பிங்கா பிங்கா வேணும்ன்னு கேட்டு குடிக்க ஆரம்பிச்சுட்டா. அம்மா சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட். பட்டினியா இருக்க விடமாட்டாங்க. அவங்க வீட்டுல இல்லைன்னாலும், ஃபிரிட்ஜில் பால், பழம் இருக்கும். அதனால நான் ஸ்கூல் விட்டு வந்ததும் அதை சாப்பிடுவேன். அதே போல சாப்பாடு சாப்பிடலைன்னாலும் ஒரு கப் தயிர், காய்கறி அல்லது பருப்பு சாப்பிடணும்ன்னு சொல்லுவாங்க. இது அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம். சாப்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒரு நல்ல உறவு இருக்கு. அளவோடு சாப்பிட்டா ஆரோக்கியமா இருக்கலாம். எந்த உணவையும் புறக்கணிக்கக் கூடாது.

ஜீரோ கார்ப், டயட் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. இயற்கை நமக்கு எல்லாமே சரிவிகிதமா தான் கொடுத்து இருக்கு. நாமும் அதை அப்படி சாப்பிட்டாலே போதும். ஆரோக்கியமா இருக்கலாம். எனக்கு என்னவோ ரொம்ப தீவிரமா டயட் செய்றவங்கள பார்த்தா எப்போதுமே கோவமா இருக்கிற மாதிரி இருக்கும். அப்படி வருத்திக் கொண்டு ஏன் சாப்பிடாம இருக்கணும்’’ என்றவருக்கு யார் ஆசையா சாப்பாடு செய்து கொடுத்தாலும் பிடிக்குமாம். ‘‘நான் வட நாடு மட்டும் இல்லை… வெளிநாட்டிலும் வசித்து இருக்கேன். அங்குள்ள உணவுகளையும் சமைக்க கத்துக்கிட்டேன். என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் பிரியாணி தான். அது மட்டும் இல்லை யாராவது ஆசையா சாப்பாடு சமைத்து சாப்பிட கூப்பிட்டாலும் பிடிக்கும்’’ என்றார் நடிகை அனுஹாசன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் !! (கட்டுரை)
Next post காதல் ஒரு மேஜிக்!! (மகளிர் பக்கம்)