காய்கறி சத்து வீணாகாமல் இருக்க…!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 3 Second

காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.

கறிவேப்பிலை சேர்க்கும்போது…

சாம்பார், ரசம் இவற்றில் போடும் கறிவேப்பிலை அனேகமாக யாரும் சாப்பிடுவதில்லை, வீணாகித்தான் போகிறது. இதை தவிர்க்க கறிவேப்பிலையை விழுதாய் அரைத்துக் கலந்து விட்டால் வயிற்றுக்குச் சேரும். கொத்துமல்லியையும் இப்படியே செய்யலாம்.

காய்கறி சத்து வீணாகாமல் இருக்க…

காய்கறிகளை நிறைய நீர் வைத்து வேக விடாதீர்கள். காய்கறிகள் வேகவும் நேரமாகும். அவற்றின் சத்துக்களும் வீணாகிவிடும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு வேகவிடலாம். அல்லது தண்ணீரைத் திட்டமாக வைத்து வேகவிடலாம்.

அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க…

அப்பளங்கள் பொரித்தவுடன் டப்பாக்களில் அவற்றை அப்படியே போடாமல் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.

இஞ்சி நிறைய இருக்கிறதா…

இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மணலில் புதைத்து வைத்து நீர் விட்டு மண்ணை ஈரமாகவே வைத்திருங்கள். இஞ்சி பல நாட்கள் வரை காய்ந்து போகாமல் பச்சையாகவே இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்? (கட்டுரை)
Next post இனிது இனிது காமம் இனிது!! (அவ்வப்போது கிளாமர்)