கொரோனா பி.சீ.ஆர். பரிசோதனை!!
கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா பி.சீ.ஆர். பரிசோதனை நடவடிக்கை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மக்களிடையே சமூகத்தொற்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறியும் வகையில் கொரோனா பி.சீ.ஆர். பரிசோதனை நடைபெற்றது.
இதன்போது சிற்றுண்டிச்சாலை வேலையாட்கள், வெதுப்பக வேலையாட்கள், சிகையங்கார வேலையாட்கள், மீன் வியாபாரிகள், நீண்டதூரம் பயணம் செய்யும் சாரதிகள் என மக்களிடையே அதிகம் நெருங்கமாக உள்ளவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாதத்தில் நூறு நபர்களுக்குமாக வாரத்தில் இருபத்திதைந்து நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.
இங்கு கோறளைப்பற்று மத்திய பொதுச் சுகாதார பரிசோதர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பரிசோதனையினை நடாத்தினர்.
Average Rating