By 15 August 2020 0 Comments

கொரோனா வைரஸ் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை… !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி வரும் சூழலில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை பாதுகாப்பு அறிவுரை என்பது சுகாதாரமான முறையில் வாழ்வது.

உங்களின் கைகளை அடிக்கடி, சரியான முறையில் சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ, ஆல்கஹால் நிறைந்த கிரிமிநாசினியை பயன்படுத்தியோ சுத்தம் செய்யுங்கள். இவை, உங்களின் கைகளில் வைரஸ் இருந்தால், அவற்றை கொன்றுவிடும்.

உங்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள். நாம் பல பொருட்களை கைகளால் எடுத்து பயன்படுத்துவதால், கைகளில் வைரஸ் இருக்கக்கூடும். அவ்வாறு கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதால், அவை நம் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது.

புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.

காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.

வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

இந்த கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க, பயனுள்ள மருந்துகளைத் தேடுவதில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட வெவ்வேறு மருந்துகளை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவை ஏற்கனவே இருக்கும் மருந்துகள். அவை கொரோனா வைரசுக்கு எதிராக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த நோயைக் குணமாக்குவதற்கு தாங்கள் ‘ரெக்கவரி’ (Recovery ) திட்டத்தின்கீழ் மேற்கொண்டுள்ள பரிசோதனை முறைதான் உலகிலேயே மிகப் பெரியது என்று பிரிட்டன் கூறியுள்ளது. இதில் ஏற்கெனவே 11,000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிப்பதில் நாம் இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? சிகிச்சை முறைகளைக் கண்டறிய என்ன பணிகள் நடக்கின்றன?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, உலகம் முழுக்க 150-க்கும் மேற்பட்ட மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் சில மருந்துகள், இந்த வைரஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படுமா என்றும் பல பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுகிறது. இதன் தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் பல கோடி மக்கள் உள்ளனர்.

இதற்கான தடுப்பு மருந்து உண்டாக்கப்பட்டால், அவர்களுக்கு ஒருவேளை கோவிட்-19 ஏற்பட்டால், அப்போது அவர்களது உடலுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் கிடைக்கும். இதன்மூலம் அவர்கள் உடல்நலம் குன்றுவது, மரணிப்பது ஆகியவை தடுக்கப்படும்.

தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அது பொருளாதார நடவடிகளைகளை மீண்டும் முழு வீச்சில் தொடங்கவும், இயல்பு வாழ்கைக்குத் திரும்பவும் உதவும்.

முதலில் கோவிட்-19 பரிசோதனையின் போது, நோய் அறிகுறிகள் இல்லை என அறியப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 14 சதவீதம் பேருக்கு வேறொரு சமயத்தில் நடைபெறும் சோதனையின் போது, நோய் அறிகுறி கண்டறியப்படுகிறது என்று ஸ்பானிய தேசிய பயோடெக்னாலஜி மையத்தின் நச்சுயிரியல் நிபுணர் லூயிஸ் என்ஜுவானெஸ், பிபிசியிடம் கூறியுள்ளார்.

இது இரண்டாவது தாக்குதல் அல்ல என்றும், வைரஸ் “ முதல் வைரஸ் தொற்றே திருப்பித் தாக்கும்” நிகழ்வு என்றும் அவர் நம்புகிறார்.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று (ஜூலை 21) சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் இடங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து சோதனை , ஏற்கனவே மற்ற மூன்று இடங்களில் தொடங்கிவிட்டது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயாள் ஷர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் முதல் முறை சோதனைக்கான மருந்து செலுத்தப்பட்டுவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam