ஊடகங்கள் ஊதுகுழலாக இல்லாமல் மக்களுக்காக செயற்பட வேண்டும்!! (கட்டுரை)

Read Time:3 Minute, 3 Second

ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஊதுகுழலாக இருக்கக் கூடாது, மாறாக பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும்’ என வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி.விஜேவீர தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக நேற்று அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற ஜகத் பி.விஜேவீர , வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வில் அமைச்சின்மேலதிக செயலாளர் (நிர்வாகம்)சத்குமார , எச்.ஹேவகே (அமைச்சின் மேலதிக செயலாளர்_அபிவிருத்தி), அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க கலுவெவ ஆகியோர் பங்கேற்றனர்.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த செயலாளர் “ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஊதுகுழலாக இருக்கக் கூடாது, மாறாக பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும். ஊடக கலாசாரமானாது மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்வதாக, நாட்டின் பொருளாதாரம், கல்வி, சகவாழ்வு மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜகத் பி.விஜேவீர களணி பல்கலைக்கழகத்தில் நுண்கலை தொடர்பில் முதலாவது பட்டம் பெற்றவர். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச கல்வி தொடர்பில் முதுகலை பட்டத்தை பெற்றவருமாவார். இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் பெற்று தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய ஜகத் பி.விஜேவீர, 35 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நிர்வாகத் துறையில் அனுபவம் பெற்றவர். இவர், தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பல்வேறு அமைச்சுகளிலும் திணைக்களங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளதுடன் அரச பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி அனுபவம் பெற்ற ஜகத், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாசா செல்லும் மதுரை மாணவி!! (மகளிர் பக்கம்)
Next post நித்யாமேனனை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள்!! (வீடியோ)