எலும்பு நலன் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன?! (மருத்துவம்)

Read Time:5 Minute, 42 Second

எலும்பு நலன் என்றவுடனே Ortho பற்றித்தான் நமக்கெல்லாம் நினைவு வரும். ஆர்த்தோ கூறும் பல தகவல்களையும் அறிந்து வைத்திருப்போம். ஆனால், ஆயுர்வேதம் மருத்துவத்தின் பார்வை என்னவென்பதையும் இந்தக் கட்டுரை மூலம் அறிந்துகொள்வோம்…

சருமம், மாமிசம், இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவை உடலில் இருக்கிற மென்மையான உறுப்புகள். இவை அம்மாவிடம் இருந்து குழந்தைக்குக் கிடைக்கின்றன. உடலில் கடினமான மற்றும் கருமை நிறமான உறுப்புகளான எலும்பு, முடி, தாடி, மீசை போன்றவை அப்பாவிடம் இருந்து கிடைக்கின்றன.

உடலை கட்டமைக்க ஏழு வகை தாதுக்கள் உள்ளன. அவை சாரம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்லம். இவை ஒவ்வொன்றும் மனித உடலை கட்டமைக்க தன் பணிகளைச் சீராக செய்ய வேண்டும்.இவற்றில் எலும்பின் பணி மனிதனை நேராக நிமிர்ந்து நிற்கச் செய்வதே ஆகும். ஏழு வகை தாதுக்களில் எலும்பு இல்லையெனில் மனிதன் உருண்டையாக இருக்க வேண்டும். ஒருவேளை மனிதனை எழும்பி நிற்கச் செய்வதால்தான் தமிழில் எலும்பு என்று பெயர் கொடுத்திருப்பார்கள் போலும்.

எலும்பின் அமைப்பை பொறுத்து 5 வகையாக பிரிக்கப்படுகின்றன. அவை கபாலத்தில் இருக்கக்கூடிய எலும்பு, பல், குருத்தெலும்பு வளைந்திருக்கிற எலும்பு(மார்புக்கூட்டில் இருக்கக்கூடிய எலும்பு), நீண்ட எலும்பு (கை, கால்களில் இருக்கக்கூடிய எலும்பு.)எலும்பின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஆயுர்வேத மருத்துவத்துறைக்கும் நவீன மருத்துவத்துறைக்கும் முரண்பாடான கருத்துகள் இருந்தாலும் அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் என்ற மகரிஷியின் எண்ணிக்கை தற்போதுள்ள நவீன மருத்துவத்தின் எண்ணிக்கைக்கு ஓரளவுக்கு ஒத்துப்போகிறது.

அடிபடுவது, அதிக வாகனப் பிரயாணம். வறட்சி தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்து குறைவு, அஜீரணம், வயது முதிர்வால் ஏற்படும் தாதுக்கள் குறைபாடு போன்றவற்றுக்கான சிகிச்சைகளையும் மூலிகைகளையும், உணவுகளையும் ஆயுர்வேதம் விளக்கிக் கூறியுள்ளது.

தாதுக்கள் குறைந்தால் அதன் குணத்திற்கு இணையான குணங்கள் கொண்ட உணவினை மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் எலும்புகள் குறைந்தால் குருத்தெலும்புகளை உணவுக்காகவும், மருந்தாகவும் பயன்படுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். குருத்தெலும்பை ரசம் வைத்தோ, சூப் செய்தோ உணவாக எடுத்துக் கொள்ளலாம். பிரண்டையை துவையலாக வற்றலாக எடுத்துக்
கொள்ளலாம்.

மருதமரப்பட்டை சிறிதளவு எடுத்துக்கொண்டு நான்கு மடங்கு அதிகமாக பால் கலந்து அதற்கு சரியான அளவு தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க வைத்து பாலின் அளவுக்கு வந்தவுடன் வடிகட்டி காலை, மாலை இருவேளை உணவுக்கு முன் பயன்படுத்த வேண்டும். இதனால் எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி போகும். இது இருதயத்திற்கும் மிகச்சிறந்த மருந்து என்று ஆயுர்வேதம் மருத்துவ புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருதமரப்பட்டையில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பதாக நவீன மருத்துவமும் ஏற்றுக்கொள்கிறது.கொம்பரக்கு என்ற மரத்தினையும், முட்டையின் ஓட்டைக் கொண்டும் மருந்து கள் தயாரிக்கப்படுகின்றன. இவையும் எலும்பை உறுதிப்படுத்த ஏதுவான மருந்தாகயிருக்கும்.

சிகிச்சை முறையை பொறுத்தவரை பஞ்சகர்மா என்ற சிகிச்சையில் பால் மற்றும் நெய்யில் கசப்பான மருந்துகளை கலந்து வஸ்தி என்ற சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எலும்பின் நலன் காக்க ஆயுர்வேத மருத்துவத்துறையில் கூறப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகள் சிகிச்சைகளில் ஒரு சில மட்டுமே இக்கட்டுரையில் பதிவு செய்யப்படுகிறது. எனவே எலும்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேணிக்காப்பதில் ஆயுர்வேதத்தின் பங்கு அளப்பரியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுக்கடை மங்கை !! (மகளிர் பக்கம்)
Next post யானையின் வலிமை… குதிரையின் சக்தி…!! (மருத்துவம்)