அம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 40 Second

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய வகையில், அரிய நோய்களை போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மஞ்சளின் மகத்துவம் குறித்து பார்க்கலாம்.மஞ்சளின் இலை, கிழங்குகள், தண்டு ஆகியவை மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. மணத்துக்காக சேர்ப்பது மட்டுமின்றி உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, டி சத்துக்களை உள்ளடக்கியது. நோய் நீக்கியாக விளங்குகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஈரலுக்கு பலம் தரக்கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

பூசு மஞ்சள் பெண்கள் பயன்படுத்துவது. மஞ்சள் பூசுவது இல்லாமல் போனதால்தான் முகத்தில் முடி, பரு, கரும்புள்ளிகள் ஏற்படுகிறது. விரலி மஞ்சள் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் மருந்துக்கு பயன்படுகிறது. மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி தலைபாரம், மூக்கடைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். பச்சை மஞ்சள் கிழங்கு பசை கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சளி, நுரையீரல் தொற்று குணமாகும். ஆவி பிடிப்பதன் மூலம் தலைநீரேற்றம், மூக்கடைப்பு, நுரையீரல் தொற்றுகள், காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் சரியாகும்.

மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. புற்றுநோய் வராமல் தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றும். மஞ்சள் வீக்கத்தை கரைக்கும். வலியை போக்கும். மஞ்சளை பயன்படுத்தி அம்மை கொப்புளங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் கிழங்கு பசையுடன் சம அளவு வேப்பிலை பசை சேர்த்து கலந்து அம்மை கொப்புளங்கள் மீது பற்றாக பூசி வைத்து குளித்துவர கொப்புளங்கள் மறையும். எவ்வித வடு இல்லாமல் மறைந்து போகும்.
மருத்துவத்தில், உணவில் மஞ்சள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோய் கிருமிகளை தடுக்க கூடியது. புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மஞ்சளை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பசையுடன், சிறிது சுண்ணாம்பு சேர்த்து பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் பூச்சிக்கடியால் ஏற்பட்ட வலி, வீக்கம், சிவப்பு தன்மை மறையும். தொற்று எதுவும் ஏற்படாது.

மஞ்சளை பயன்படுத்தி அடிபட்ட வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து கட்டினால் வீக்கம் வற்றும். வலி குறையும். மஞ்சளை கொண்டு கட்டிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பொடி, சாதம் ஆகியவற்றை அரைத்து எடுத்து கட்டிகள் மேல் பற்றாக வைத்து கட்டினால், கட்டிகள் பழுத்து உடையும். புண் விரைவில் ஆறும்.குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பெருங்காயத்தை எடுத்து சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சு, முதுகு பகுதியில் தடவினால் இருமல் இல்லாமல் போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவள் யாரோ? : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…!! (மகளிர் பக்கம்)
Next post அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்!! (மருத்துவம்)