புற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 0 Second

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், புற்றுநோயை தடுக்க கூடியதும், ஆறாத புண்களை ஆற்றும் தன்மை கொண்டதும், இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க செய்வதுமான சொடக்கு தக்காளியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். சாலையோரங்களில் எளிதில் கிடைக்க கூடியது சொடக்கு தக்காளி. இது, தக்காளி இனத்தை சேர்ந்தது. கட்டிகளை கரைக்கும் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. வலி நிவாரணியாக பயன் தருகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நுரையீரலை பாதிக்கும் நோய்களை குணப்படுத்துகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது.

சொடக்கு தக்காளி இலைகளை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சொடக்கு தக்காளி இலை, மஞ்சள் பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் சொடக்கு தக்காளி இலை, காய்களை நீர்விட்டு சுத்தப்படுத்தி நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும். உடல்வலி, மூட்டுவலி பிரச்னை இருப்பவர்கள் காலை, மாலை குடித்துவர வலி குணமாகும். புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்துவர புற்று செல்கள் பரவுவது தடுக்கப்படும். சர்க்கரை நோய், உயர் ரத்தம் உள்ளவர்களும் இந்த தேனீரை எடுத்துவர பயன்தரும்.

புற்றுநோய்க்கு அற்புதமான மருந்தாக சொடக்கு தக்காளி விளங்குகிறது. இது, நீரை வெளியேற்றும் வேதிப் பொருட்களை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு

சக்தி உடையது. மணித்தக்காளியை போன்று காணப்படும். நுரையீரல், மூளை, மார்பக புற்றுவராமல் தடுக்கிறது.சொடக்கு தக்காளியை பயன்படுத்தி இளம் தாய்மார்களுக்கான பால் சுரப்பை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். சொடக்கு தக்காளி இலை பசையுடன், வினிகர் சேர்த்து கலந்து மார்பகத்தின் மீது பற்றாக போடும்போது பால் சுரப்பு அதிகரிக்கும். சொடக்கு தக்காளியின் காய் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது.
சொடக்கு தக்காளி இலைகளை பயன்படுத்தி சர்க்கரை நோயினால் உண்டாகும் புண்கள், ஆறாத புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்னணய் எடுக்கவும். இதனுடன் சொடக்கு தக்காளி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இந்த தைலத்தை பூசிவர சர்க்கரை நோயினால் உண்டான புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். சொடக்கு தக்காளி உணவாகி மருந்தாகிறது.

பூஞ்சை காளான்கள், கிருமிகளை போக்கும். தொற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை கட்டிகளையும் கரைக்கும்.ஆஸ்துமாவுக்கான எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும்.இக்காலகட்டத்தில், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் சிரமப்படுவார்கள். இப்பிரச்னைக்கு வில்வம், திப்பிலி ஆகியவை மருந்தாகிறது. வில்வ இலையை பொடித்து அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் திப்பிலி பொடி அரை ஸ்பூன் சேர்க்கவும். பின்னர், தேனுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ஆஸ்துமா நாளடைவில் அகன்று போகும். சுவாச கோளாறு சீர்பெற்று ஆரோக்கியம் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு!! (மருத்துவம்)
Next post வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)